சத்து நிறைந்த நெல்லிக்காய் சாதம் :


Posted by-Kalki Teamதினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் புத்துணர்ச்சியோடும் இளமையாகவும் இருக்கலாம். இன்று நெல்லிக்காய் வைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் - 6

சாதம் - 1 கப்

பச்சை மிளகாய் - 4

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

பெருங்காயப் பொடி - ½ தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

தாளிக்க :

கடுகு - 1 தேக்கரண்டி

கடலைபருப்பு - ½ தேக்கரண்டி

உளுந்தம்பருப்பு - ½ தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

வேர்கடலை - தேவைக்கு

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை :

* சாதத்தை ஒரு தட்டில் ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.

* பெரிய நெல்லிக்காயை கழுவி பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும். கொட்டையை எடுத்து விடவேண்டும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின் உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை, கடலைப்பருப்பு இரண்டையும் போட்டு சிவக்க வறுத்த பின் கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும்.

* அடுத்து அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும். சிறிது நேரம் வதங்கியவுடன் (இரண்டு அல்லது மூன்று நிமிடம்) அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.

* அடுப்பிலிருந்து இறக்கிய நெல்லிக்காய் கலைவையை ஆற வைத்த சாதத்துடன் சோ்த்து கிளற வேண்டும் (சாதம் குலையாமல் கிளறவேண்டும்).

* விருப்பப்பட்டால் பொட்டுக் கடலையுடன், முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து கிளறிய சாதத்துடன் சோ்த்து பரிமாறலாம்.

* நெல்லிக்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி மிகுந்த சுவையாக இருக்கும்.

* இப்பொழுது சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி

* நெல்லிக்காயைத் துருவும் போது மிகவும் பொடியாக துருவ வேண்டும். அப்படி பொடியாகத் துருவினால் சாதத்துடன் நன்றாக கலந்துவிடும்.Post Comment

Post Comment