முதுகு பகுதியை பலப்படுத்தும் அர்த்த சலபாசனம் :


Posted by-Kalki Teamமுதுகு வலி, தோள்பட்டை வலியால் அவதிப்படும் பெண்கள் இந்த அர்த்த சலபாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்.

பெண்களுக்கான ஆசனங்களில் நாம் செய்த செய்கின்ற பிராணாயாமம் மற்றும் அனைத்து ஆசனங்களும், அலுவலகம் செல்லும் பெண்களின் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளையும் வெகுவாகக் குறைத்து, சரிசெய்யும் சக்திகொண்டவை.

செய்முறை :

விரிப்பில் புஜங்காசனத்துக்குப் படுத்ததுபோல, படுக்கவும். கைகளை உடலுக்கு அருகில் வைக்கவும். இந்த நிலையில் இருந்து, மூச்சை உள்ளே இழுத்தபடியே முதலில் இடது காலை மேல்புறமாகத் தூக்கவும். ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்கு வரவேண்டும். இதேபோல், வலது காலைத் தூக்கி இறக்கவும். இது ஒரு சுற்று. இதுபோல ஆறு முறை செய்ய வேண்டும். இடையில் மூச்சுவாங்கினால், கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்.

பலன்கள்: பலவீனமான கீழ் முதுகு பலப்படும். கால்களைப் புவியீர்ப்பு விசைக்கு எதிராகத் தூக்குவதால் அதுவும் ஓரளவு பலமடையும்.

source - dt next


Post Comment

Post Comment