உதை வாங்குவதை பெருமையாக நினைக்கும் நடிகர் :


Posted by-Kalki Team



ரஜினியுடன் நான் நடிப்பேன் என்றெல்லாம் நான் கனவு கூட கண்டதில்லை. வில்லனாக அவரிடம் உதை வாங்குவது பெருமைக்குரிய விஷயம், என்று கூறியுள்ளார் நடிகர் அக்ஷய் குமார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பிரமாண்ட படமான 2.0- வில் வில்லனாக நடிக்கிறார் இந்தி நடிகர் அக்ஷய் குமார். இந்தப் படம் முறைப்படி அறிவிக்கப்பட்டபோது, போட்டோவுக்கு போஸ் கொடுத்ததோடு சரி. அதன் பிறகு யாரிடமும் படம் குறித்து வாய் திறக்க மறுத்து வருகிறார் அக்ஷய் குமார்.ஒரு முறை பத்திரிகையாளர் ஒருவர் மிகவும் வற்புறுத்தி இந்தப் படத்தில் அவர் வேடம் குறித்துக் கேட்டபோது, ’நான் அந்தப் படத்திலிருந்து விலகிவிட வேண்டும் என எதிர்ப்பார்க்கிறீர்களா?’ என்று கேட்டார். அதேநேரம், ரஜினியுடன் நடிப்பது குறித்த கேள்விக்கு பக்கம் பக்கமாக பதிலளித்திருக்கிறார் அக்ஷய்.எனக்கு பெருமையான விஷயம்தான்.

இன்று நடந்த ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட காட்சி வேடிக்கையாகத்தான் இருந்தது. ஆனால் அந்தக் காட்சியை ரஜினி செய்யும் விதம் என்னை வியப்பின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. ரஜினி மிகச் சிறந்த கலைஞர். அதைவிட மிகச் சிறந்த மனிதர்...



Post Comment

Post Comment