#ட்ரெயின் #ஒரு #சந்தையை #தேடிப் #போனால் #எப்படியிருக்கும்?


Posted by-Kalki Team



சனிக்கிழமை 4 தடவைகள் சந்தைக்குள் புகுந்தது ட்ரெயின்! அட ஜோக் இல்லை, நெசமாதானுங்க!!

நம்மூரில் ட்ரெயின் வந்து நின்றால், பயணிகளுக்கு பொருட்களை விற்க ஆட்கள் வந்துவிடுவார்கள். ஆந்திரா பக்கத்தில் சில கிராமப் பகுதிகளில், கோழியே (உசிர்தானுங்க) கொண்டுவந்து விற்பது வழக்கம். வேறு சில இடங்களில் தார்பூசனி, வெள்ளரிக்காய், நிலக்கடலை என்று ஒரு மினி சந்தையே ட்ரெயினை தேடி வந்துவிடும்.

ஆனால், ட்ரெயின் ஒரு சந்தையை தேடிப் போனால் எப்படியிருக்கும்?

தமாஷூக்கு சொல்லவில்லை. நிஜமாகவே, சந்தையை தேடிப் போகும் ட்ரெயின் ஒன்றை தாய்லாந்தில் காணவாம். அதுவும், சந்தையின் நடுவே, செல்லும் சுவாரசிய காட்சி அது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து 120 கி.மீ. தொலைவிலுள்ள மேக்லொங் சந்தை, ஒரு ரயில்வே தண்டவாளத்தின் மீது உள்ளது. தண்டவாளத்துக்கு மேலே என்றால் மேம்பாலம் அல்ல, நிஜமாகவே தண்டவாளத்தின் மேலே நடக்கிறது சந்தை

ஒவ்வொரு சனிக்கிழமையும், அதிகாலை 3.30 மணியிலிருந்து இரவு 8 மணிவரை சந்தை நடக்கிறது. இந்த ரயில் பாதையில், 4 தடவைகள் ட்ரெயின் வந்து செல்கிறது. காலை 9, 11, மாலை 2.30, 5.40 மணிக்கு ட்ரெயின் வரும்.

வேகமாக வரும் ட்ரெயின், சந்தையை நெருங்கியதும் வேகம் குறைந்து ஹாரன் அடிக்கிறது. உடனே தண்டவாளத்தின் மீது இருந்த கடைகள் சற்றே பின் நகர்கின்றன. ட்ரெயின் மெதுவாக கடந்து செல்கிறது. ட்ரெயின் அந்த இடத்தை கடந்து சென்ற மறுநிமிடமே, மீண்டும் கடைகள் பழைய இடங்களுக்கு வந்து விடுகின்றன. வியாபாரம் களைகட்டி விடுகிறது.

இதை எழுத்தால் புரிய வைப்பதைவிட, கீழேயுள்ள லிங்கில் உள்ள போட்டோக்களில் பாருங்கள். சுவாரசியமாக இருக்கும்.

ட்ரெயின் சந்தையடுகே வந்து வேகம் குறைப்பதையும், தண்டவாளத்தை மூடி கடைகள் இருப்பதையும், ட்ரெயின் நெரங்கும்போது அவசர அவசரமாக கடைகள் நகர்வதையும், முதல் 4 போட்டோக்களில் பாருங்கள்.

5-வது போட்டோவில், ட்ரெயின் எஞ்சின் டிரைவரின் சீட்டில் இருந்து சந்தை தெரிவதை பாருங்கள். 8-வது போட்டோவில் ட்ரெயில் சந்தையை கடந்து செல்வதை பாருங்கள். சந்தையில் நிற்பவருக்கும், கடைகளுக்கும் எவ்வளவு நெருக்கமாக ட்ரெயின் போகிறது என்பதை பாருங்கள்.


Post Comment

Post Comment