வித்யாவனம் - #மதிப்பெண்கள் இல்லை ரேங்க் இல்லை தேர்வுஇல்லை !


Posted by-Kalki Teamகோவையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் தமிழக-கேரள எல்லையில் இருக்கிறது ஆனைக்கட்டி கிராமம். இக் கிராமத்தில் தான் வித்யாவனம் பள்ளி இயங்கி வருகிறது. ஆனைக்கட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகள் இங்கு கல்வி கற்று வருகிறார்கள்.

வழக்க மாகப் பள்ளிகளில் கற்பிக்கும் நடைமுறையைப் பின்பற்றாமல் வாழ்க்கைக்கு உகந்த விஷயங்களைப் போதிப்பதால், பலவிதங்களிலும் மாறுபட்டுத் திகழ்கிறது இந்த தனியார் பள்ளி. வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினக் குழந்தைகளுக்கு, நகர்ப்புறக் குழந்தைகளுக்கு இணையான தரமான கல்வியை வழங்கிவருகிறார் ­சென்னையைச் சேர்ந்த 72 வயதான பிரேமா ரங்காச்சாரி.

இப்பள்ளி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அளிக்கிறார்.

“கல்வித் துறையில் எனக்கு நீண்ட கால அனுபவம் உண்டு. 2001-ல் ஆனைக்கட்டிக்கு வந்து ஆர்ஷ வித்யா குருகுலம் சென்று சுவாமி தயானந்த சஸ்வதியைச் சந்தித்தேன். ஆசிரமம் சார்பில் ஆனைக்கட்டியில் நடத்தப்பட்டு வந்த பால்வாடி பள்ளி ஆசிரியர் களுக்கு பயிற்சிகளை அளிப்பதற்கான சிலபஸை உருவாக்கிக் கொடுத்தேன். இதனால் அடிக்கடி ஆனைக்கட்டி வந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போதுதான் இங்கிருக்கும் பெண்கள், ‘நீங்களே ஏன் இங்கு ஒரு பள்ளியைத் துவக்கக்கூடாது?’ என்று கேட்க, 2007-ல் வித்யாவனம் உருவானது. பள்ளிக்கான நிலத்தை சுவாமி ஜியே மனமுவந்து அளித்தார். எங்கள் தாயார் புவனா நினைவாக ‘புவனா ஃபவுண்டேஷனை’த் துவக்கி அதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு பள்ளியை நடத்த ஆரம்பித்தோம்.

2007-ல் 40 குழந்தைகளுடன் துவக்கப்பட்ட இப் பள்ளியில், தற்போது 310 பேர் படிக்கின்றனர். இதில் 125 பேர் பழங்குடியின மாணவர்கள். மூன் றரை வயதிலிருந்து எட்டு வயது வரையான குழந் தைகளை வயதுக்கேற்ப 4 பிரிவுகளாகப் பிரித்து கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் 4 ஆசிரியர் கள் மட்டுமே இருந்தனர். இப்போது ஆசிரியர்களின் எண்ணிக்கை 25-ஐ எட்டியிருக்கிறது.

“இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பள்ளியை ஆரம்பித்தபோது மிகுந்த தயக்கத்துடன்தான் தங்கள் பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். இங்கு வழக்கமான முறையில் பாடங்கள் போதிப்பதில்லை. ஏதாவது ஒரு சப்ஜெக்ட்டை எடுத்துக்கொண்டு அது தொடர்பான செய்திகளைச் சேகரித்து கற்றுத் தருகிறோம். உதாரணமாக ‘மண்’ என்ற ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு, அதைப் பற்றிய தகவல்களைத் திரட்டச் சொல்கிறார்கள்.

மண்ணைப் பற்றிய கவிதை, மண்ணால் செய்யப்பட்ட பாண்டங்கள், கலைப் பொருட்கள், மண்ணின் உபயோ கம், விவசாயம் என்று மண் தொடர்புடைய பல் வேறு விஷயங்களைப் புரிய வைக்கிறார்கள். அவர்களைக் கொண்டே கலைப் பொருட்களை, புராஜக்ட்களை செய்யச் சொல்கிறார்கள். இதனால் போரடிக்காமல், சம்பந்தப்பட்ட விஷயத்துக்குள் ஆழமாக மாணவர்கள் உடுருவிப் போய் கற்றுக் கொள்ள முடிகிறது. இந்த வித்தியாசமான கற் பித்தலை ஏற்றுக்கொள்வதில் ஆரம்பத்தில் பலருக் கும் தயக்கம் இருந்தது.

மதிப்பெண்கள் இல்லை, ரேங்க் இல்லை என்றால் யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்? ஆனால், இங்கு வருவதால் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத் தைப் பார்த்தபிறகு, முழுமையாக இந்த முறையை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு அனுப்புகின்றனர். 8-ஆம் வகுப்பு வரை இங்கு படிக்கும் மாணவர்கள் யாருக்கும் தேர்வு கிடையாது” என்று நம்மை ஆச்சரியப்படுத்தினார் பிரேமா.

மதிப்பெண்கள் இல்லை என்றாலும் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிட்டு, ஃபைலில் குறித்து வைக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவை எடுத்துக்கொண்டு பாடங்கள் நடத்தப்படுவதால், அந்தப் பிரிவில் மாணவனின் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கிறது.

இங்கு படிக்கும் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் என்று எதுவும் இல்லை. குறிப்பிட்ட சப்ஜெக்ட்டைப் பற்றிய தகவல்கள் அச்சிடப்பட்ட நோட்ஸ்களின் ஜெராக்ஸ் காபியை வழங்குகிறோம். 8-ஆம் வகுப்பு வரை இப்படித்தான் பாடங்கள் இருக்கும். அதற்குப் பிறகு, இந்த மாணவர்களை வழக்கமான பள்ளிகளைப் போல தேர்வுக்குத் தயார்ப்படுத்துகிறோம்” - விவரித்துக் கொண்டே போன பிரேமாவை இடைமறிக் கிறோம்.

திடீரென்று தேர்வு, அதற் கான தயாரிப்பு என்றால் மாண வர்கள் அச்சப்படமாட்டார் களா?

“கொஞ்சம் சிரமமான காரியம்தான். ஆனால் இந்தச் சமூகத்தில் தேர்வும், மதிப் பெண்களும் இருந்தால்தானே அரசு வழங்கும் சான்றிதழைப் பெற முடியும்? இங்கு படிக்கும் மாணவர்களை 7-ஆம் வகுப்பு முதலே வழக்கமான தேர்வு முறைக்குத் தயார்படுத்த ஆரம்பிக்கிறோம். நகர்ப்புறத்தில் இருந்து தனித்து இருந்தாலும், எல்லாப் பள்ளிகளையும்போல வித்யாவனம் பள்ளி மாணவர்களும் நடனம், இசை, விளையாட்டு என்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இங்கு படிக்கும்

மாணவர்களில் 4 பேருக்கு மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் கிடைத்திருக்கிறது. அந்த மாண வர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு இசை மற்றும் நடனம் கற்க மத்திய அரசு மாதந்தோறும் ரூ.3,000 ஊக்கத் தொகையாக அளிக்கிறது. அனைத்து மாண வர்களுக்கும் பள்ளியி லேயே காலை நேரத்தில் சத்துமாவு கஞ்சியும், மதிய உணவும் வழங் கப்படுகிறது. மாலையில் பாலுடன், ஏதாவது ஸ்நாக்ஸும் தருகிறார்கள்.

“மாறி வரும் காலத்துக்கேற்ப இந்த மாணவர் களுக்கான கற்பிக்கும் முறையிலும் சில மாற்றங் களைப் புகுத்த விரும்புகிறேன். தொழில்முறைக் கல்வியை அவர்களுக்கு அளிக்கும் திட்டமும் உள்ளது. படித்துவிட்டு இங்கிருந்து வெளியேறும் மாணவர்கள் ஏதேனும் ஒரு தொழிற்பயிற்சியைக் கற்றுக்கொண்டு போக வேண்டும். அது அவர்களை தன்னம்பிக்கையுடன் சொந்தக் காலில் நிற்க உதவும்” என்கிறார் பிரேமா லட்சியத்தை கண் களில் தேக்கி.

.


Post Comment

Post Comment