சப்தமில்லாமல் ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம் :


Posted by-Kalki Teamநடிகை ஸ்ரீதேவி சப்தமில்லாமல் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் குறித்த மேலும் தகவல்கள் கீழே விரிவாக பார்ப்போம்.

80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார் ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்ட ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்கு 2012-ஆம் ஆண்டு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அப்படத்தை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘பாம்பே டாக்கீஸ்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘புலி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் திரும்ப பெற்றார்.

இந்நிலையில், தற்போது சத்தமேயில்லாமல் ‘MOM’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. இப்படத்தை ரவி உதயாவர் என்பவர் இயக்கி வருகிறார். வருகிற ஜுலை 14-ந் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டுவர தயாராகி வருகின்றனர்.


Post Comment

Post Comment