ரஜினி படத்தலைப்பை கைப்பற்றும் `விஜய் 61 படக்குழு?


Posted by-Kalki Teamஅட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு, ரஜினியின் வெற்றிப் படத் தலைப்பை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன தலைப்பு என்பதை கீழே பார்ப்போம்.

விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போ இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கிய படப்பிடிப்பு தளமான பின்னி மில்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இயக்குநரும், நருகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தனது 100-வது படமாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு `இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்கான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில், விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்து வருவதால், ரஜினி நடிப்பில் 1982-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `மூன்று முகம் படத்தின் தலைப்பையே `விஜய் 61 படத்திற்கு வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்புக்காக தமிழ் புத்தாண்டு வரை காத்திருக்கத் தான் வேண்டும்.


Post Comment

Post Comment