சாதனை... சாதனை... வைக்கம் விஜயலட்சுமி சாதனை...


Posted by-Kalki Teamசாதனை... சாதனை... என்று கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ந்து 5 மணி நேரம் இடைவிடாமல் காயத்ரி வீணை மூலம் பாடல்களை பாடி புதிய சாதனையை படைத்துள்ளார் வைக்கம் விஜயலட்சுமி. இதுவல்லவா மகளிர் தின சாதனை...

மலையாளம், தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் அவர் பாடிய 67 பாடல்களும் மற்றும் 12 கீர்த்தனைகளும் அடங்கும். நிச்சயமாக இந்த சாதனை கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்..

இதுகுறித்து வைக்கம் விஜயலட்சுமி கூறுகையில், "என்னுடைய குரு, பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகளின் கனவை நனவாக்க முடிந்ததற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.Post Comment

Post Comment