சிந்தனை தெளிவடைய செய்யும் ஞான சின் முத்திரை :


Posted by-Kalki Teamதியானம் செய்வதற்கு இந்த முத்திரை உகந்தது. மனஅமைதி வேண்டுபவர்கள் இந்த முத்திரையை தினமும் செய்து வரலாம்.

பலன்கள் :

இது தியானத்திற்கு ஏற்றது. சிந்தனை தெளிவு அடையும். நரம்பு மண்டலங்கள் நன்றாக செயல்படும். இரத்த அழுத்தம் சீர்ப்படும்.

செய்முறை :

இருகைகளையும் முழங்கால் மீது உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து கட்டைவிரல் ஆட்காட்டி விரல் நுனியைத் தொட்டவாறு லேசான அழுத்தம் தரவேண்டும்.

காலை, மாலை என 10 முதல் 15 நிமிடம் தினமும் செய்ய வேண்டும்.

இந்த முத்திரையை தரையில் அல்லது சேரில் அமர்ந்து கொண்டு செய்யலாம்.

1 மாதம் தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.


Post Comment

Post Comment