திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி பெருவிழா தொடங்கியது :


Posted by-Kalki Team



திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று காலையில் கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று காலையில் கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 15-ந்தேதி பட்டாபிஷேகம், 16-ந்தேதி திருக்கல்யாணம், 17-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனி பெருவிழா மிக சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா ஓவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா இன்று 4-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

திருவிழா தொடர்ந்து வருகின்ற 18 வரை நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று 4-ந்தேதி காலையில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சர்வ அலங்காரமும் சிறப்பு பூஜையும் நடந்தது. இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க இருப்பிடத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

இதனைதொடர்ந்து சுவாமி அருள்பார்வையில் தங்கமூலாம் பூசப்பட்ட கம்பத்தில் மேளதாளங்கள் முழங்க பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் மகா அபிஷேகமும் தீப தூப ஆராதனையும் நடந்தது. முன்னதாக கொடியேற்றப்பட்டது. அங்கு கூடி இருந்த பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோ‌ஷங்கள் முழங்க பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்

திருவிழாவையொட்டி காலையிலும் இரவிலுமாக தினமும் ஒருவாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 15-ந்தேதி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக மறுநாள் 16-ந்தேதி தெய்வானை-முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியா விடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளுகின்றனர். திருவிழாவின் முத்தாய்ப்பாக 17-ந்தேதி மலையை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேரோட்டம் நடக்கிறது.


Post Comment

Post Comment