புதிய டிரேட்மார்க் தகவல்களில் மடிக்கக் கூடிய சாம்சங் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகியுள்ளது :


Posted by-Kalki Teamதற்சமயம் வெளியாகியுள்ள டிரேட்மார்க் தகவல்களில் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் கேலக்ஸி X என அழைக்கப்படலாம் என்றும் இதன் அம்சங்களும் வெளியாகியுள்ளது.

புதிய டிரேட்மார்க் தகவல்களில் மடிக்கக் கூடிய சாம்சங் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகியுள்ளது

இண்டர்நெட்டில் வெளியாகியுள்ள புதிய டிரேட்மார்க்கல், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் மடிக்கும் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி X என அழைக்கப்படலாம் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் வணிக ரீதியாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டிரேட்மார்க் ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில் கேலக்ஸி X பிரான்டிங் கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படம் இடம் பெற்றுருந்தது. எனினும் இந்த புகைப்படம் போலியானதாகவே இருக்கும் என கூறப்படுகின்றது.

முன்னதாக வெளியான தகவல்கலில் சாம்சங் நிறுவனத்தின் புதிய ரக டிஸ்ப்ளேக்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. மடிக்கும் வசதி கொண்ட டிஸ்ப்ளே மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் மடிக்கும் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனில் வளையும் வசதி கொண்ட AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் கேலக்ஸி X ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி X மடிக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போன் போன்றும் சாதாரண நிலையில் டேப்லெட் போன்றும் பயன்படுத்த முடியும். சாம்சங் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் கடந்த சில ஆண்டுகளாகவே தயாரிப்பில் இருந்து வருகிறதும் குறிப்பிடத்தக்கது.


Post Comment

Post Comment