போயிங் விமானத்தை அசால்ட்டாக கட்டி இழுத்த டாடா ஹெக்ஸா கார்!!


Posted by-Kalki Teamகடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹெக்ஸா கார் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 1,500 டாடா ஹெக்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. வரும் மாதங்களில் இந்த முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், டாடா ஹெக்ஸா காரின் பராக்கிரமங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளும் விதத்தில், வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது டாடா மோட்டார்ஸ். அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, டாடா ஹெக்ஸா காரின் பராக்கிரமத்தை காட்டும் விதத்தில், இரண்டு சக்கரத்தில் அந்த கார் சாகசம் செய்து பயணிப்பது போன்ற ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அந்த காரின் பராக்கிரமத்தை காட்டும் விதத்தில் மற்றொரு வீடியோவும் இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதாவது, போயிங் 737 -300 விமானத்தை டாடா ஹெக்ஸா கார் கட்டி இழுக்கும் வீடியோ இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

வெற்று எடை கொண்ட அந்த போயிங் விமானத்தை டாடா ஹெக்ஸா கார் எளிதாக இழுத்துச் செல்லும் அந்த வீடியோ இப்போது ஆன்லைனில் வைரலாகி உள்ளது. 33 டன் எடை கொண்ட அந்த விமானத்தை டாடா ஹெக்ஸா திக்கி திணறாமல் நிதானமாக இழுத்து செல்கிறது.

டாடா ஹெக்ஸா காரில் இருக்கும் 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.2 லிட்டர் டீசல் எஞ்சினின் வல்லமையை காட்டும் விதத்தில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. அதாவது, மிக குறைவான எஞ்சின் சுழல் வேகத்தில் மிகச் சிறப்பான டார்க் திறனை இந்த கார் வெளிப்படுத்தும் என்பதை காட்டுவதாக இது அமைந்துள்ளது.

அதிக எடையுடைய விமானத்தை அசால்ட்டாக இழுப்பதற்கு டாடா ஹெக்ஸா காரின் எடையும் மிக முக்கிய காரணம். இந்த கார் 2.2 டன் எடை இருப்பதால், எந்த பிரச்னையும் இல்லாமல் அந்த காரை இழுத்துச் சென்றுள்ளது.Post Comment

Post Comment