நான் இப்போதும் 17 : சோல்கிறார் நடிகர் சிவகுமார்


Posted by-Kalki Team



எனக்கு வயது 74 கடந்து 75--ஐத் தொட்டுக் கொண்டு இருக்கிறேன். நான் என்னை செவன்டீஸில் இருப்பதாக நினைப்பதில்லை. செவன்டீனில் இருப்பதாகவே நினைக்கிறேன். நான் சென்னைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓவியம் ,பயிற்சி என்று 7 ஆண்டுகள் ஓடிவிட்டன.நடிகனாக சினிமா, நாடகம், டிவி என்று 40 ஆண்டுகள் போவிட்டன. இது போதும் என்று முடிவெடுத்த பிறகு மேடைப் பேச்சு பக்கம் தாவினேன். நான் பெரிய பேச்சாளன் இல்லை. அடுக்கு மொழி கவர்ச்சி நடை என்றெல்லாம் என்னால் பேசமுடியாது.

அப்போதுதான் இப்படி தலைப்பு வைத்து உரையாற்றினேன். இப்படி இதுவரை 16 உரைகள் ஆற்றி விட்டேன் அவற்றில் 15 உரைகள் ஒளிபரப்பாகி விட்டன. அந்த உரைகளில் கம்பராமாயணம். மகாபாரதம் உரைகள் வேறுபட்ட அனுபவங்கள். ிகம்பராமாயணம்ீ இந்தியப் பெருங்கடல் போன்றது என்றால் ிமகாபாரதம்ீ பசிபிக் பெருங்கடல் போன்றது. கம்பராமாயணத்தை இரண்டே வரியில்கூட சோல்ல முடியும் மகாபாரதத்தை அப்படிச் சோல்ல முடியாது.அதில் ஏராளமான கதாபாத்திரங்கள், ஏராளமான கிளைக்கதைகள் உண்டு. மகாபாரதத்துக்கு தமிழில் உள்ள நூல்கள் பெரியவை. ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து, வில்லிப்புத்தூரார் எழுதியது, சோ எழுதிய மகாபாராதம் பேசுகிறது. போன்றவை அளவில் பெரியவை.

நான் நடைப் பயிற்சி போகும் போது இதைப் பலரிடம் பேசிக்காட்ட முயன்றிருக்கிறேன். பாதி பாதி பேசிக் காட்டியிருக்கிறேன். நான் ஆரம்பித்ததும் பலரை தலைதெறிக்க ஓட விட்டிருக்கிறேன். இருந்தாலும் சில பேராசிரியர்கள் உள்பட சிலரிடம் முழுதாகப் பேசிக் காட்டியுள்ளேன். எனக்கு முன்னே உட்கார்ந்திருந்தவர்கள் தமிழருவி மணியன்,பிரபஞ்சன் போன்றஅதிகம் படித்தவர்கள். அப்போது பதற்றமாகத்தான் இருந்தது. ஆனால் பயந்தால் வேலைக்கு ஆகாது இவர்கள் முன் பேசவேண்டும் என்றால் எதிரே இருப்பவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்கிற எண்ணம் வர வேண்டும். அந்த நம்பிக்கையோடுதான் பேசினேன் என மகாபாரதம் தொடர்பாக விழா ஒன்றில் பேசும் போது சோன்னார்.



Post Comment

Post Comment