ஹேவல்ஸ் நிறுவனம் சார்பில் 8 இறக்கை கொண்ட மின்விசிறி அறிமுகம் :


Posted by-Kalki Team



எப்எம்இஜி துறையில் முன்னணியில் உள்ள ஹேவல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், அதிக காற்று வீசும் திறனுடன் 8 இறக்கைகள் கொண்ட ஆக்டெட் என்ற மின்விசிறியை இந்தியாவில் முதன்முதலாக அறிமுகம் செய்துள்ளது. இது, ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் இயக்கக்கூடிய புளூடூத் தொழில்நுட்ப திறன் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மின்விசிறி பியூச்சுரோ, வழக்கமான மின்விசிறியை விட 57 சதவீத அதிக ஆற்றல் கொண்ட பிஎஸ்டிசி தொழில்நுட்ப மின்விசிறி எபிசியன்சியா, 32 வாட்ஸ் மின் சக்தியை மட்டும் பயன்படுத்தும். தூசி அதிகம் சேராமல் தடுக்க டஸ்டோ-போபிக் மெட்டாலிக் பெயின்ட் பூச்சு கொண்ட இந்த மின்விசிறியை சுத்தப்படுத்துவது எளிதானது. மேலும், நவீன தொழில்நுட்பம் கொண்ட அர்பேன் மற்றும் என்டைசர் ஆர்ட் என்ற இரு வேரியண்டுகளையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ஹேவல்ஸ் இந்தியா நிறுவன செயலாக்க துணை தலைவர் கூறுகையில், இன்றைய காலத்திற்கு ஏற்பவும், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், நவீன தொழில்நுட்பத்தில் இந்த மின்விசிறி அறிமுகம் செய்யப்படுகிறது, என்றார்.



Post Comment

Post Comment