தொடக்கமும்.. முடிவும்...ராமேஸ்வரத்தில் :


Posted by-Kalki Teamபுண்ணிய தல யாத்திரையானது, ராமேஸ்வரத்தில் தொடங்கி ராமேஸ்வரத்திலேயே முடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புண்ணிய தல யாத்திரை என்பது பலரும் காசி முதல் ராமேஸ்வரம் வரை செல்வதையே சொல்வார்கள். ஆனால் இந்த புண்ணிய தல யாத்திரையானது, ராமேஸ்வரத்தில் தொடங்கி ராமேஸ்வரத்திலேயே முடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள் சிலர். அதாவது காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராட வேண்டும். அங்குள்ள மணல் மற்றும் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு காசிக்கு செல்ல வேண்டும்.

காசியில் உள்ள கங்கை தீர்த்தத்தில் நீராடி, ராமேஸ்வரத்தில் எடுத்துச் சென்ற மணலை அங்கு போட்டு விட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் தொடங்கி ராமேஸ்வரத்திலேயே தல யாத்திரையை முடிக்க வேண்டும்.

இது போன்று பலராலும் செய்ய முடியாது. எனவே ராமேஸ்வரம் ராமநாதர் தலத்திலேயே கங்கை தீர்த்தம் விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்கி, மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கிவிட்டு, அந்த தீர்த்தம் கொண்டு ராமநாதருக்கு அபிஷேகம் செய்தால், நினைத்தது நடக்கும்.


Post Comment

Post Comment