நடிகை சரோஜா தேவி மலரும் நினைவுகள் :


Posted by-Kalki Teamநான் பெங்களூரில் பிறந்திருந்தாலும் எனக்குபுகுந்த வீடு சென்னை தான். என்னுடைய உயிர் பிரிந்தால் கூட சென்னையில்தான் பிரியவேண்டும் என்று நான் இறைவனை பிராத்திப்பது உண்டு. என்னுடையகணவர் கூறியது போல் அனைத்தும் நடந்து வருகிறது. இன்று நானும் உண்டு

மற்றவர்களுக்கும் அளிக்கும் அளவுக்கு இறைவன் என்னை நல்ல இடத்தில்வைத்துள்ளான். என்னுடைய வாழ்க்கையில் என்னால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்அவர்களை மட்டும் மறக்கவே இயலாது. அவரும் நானும் இணைந்து நடித்த நாடோடிமன்னன் படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து படத்தை கலர் படமாகமாற்றினார்.

அதற்க்கு காரணம் யாதெனில் நான் அந்த படத்தில் அறிமுக நடிகை ,என்னை ரசிகர்கள் ஏற்று கொள்வதற்காக, படத்தில் நான் வரும் பகுதியில்இருந்து படத்தை கலர் படமாக மாற்றி இருக்கிறார். அதே நேரத்தில்எதிர்பார்த்தது போல் அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன் பிறகுநானும் அவரும் பல படங்களில் சேர்ந்து நடித்தோம்.

எனக்கு நிறைய விஷயங்களைகற்றுத்தந்தவர் அவர் , நான் எப்படி பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும்என்பது முதல் பல நல்ல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார். என்னால்நிச்சயம் அவரை ஒருபோதும் மறக்கவே முடியாது. அவருடைய ராமாபுரம்

தோட்டத்தைபார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எல்லோரும் அவரைதெவம் என்று சோல்லுவது உண்டு. நானும் அவருடைய ராமாபுரம் இல்லத்துக்குசென்று பல முறை உணவு உண்டுள்ளேன் , பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன்.அதனால் நீங்கள் அவர் அவரை தெவம் என்று கூறுவதோடு நிறுத்திவிடாமல்அவருடைய இருப்பிடம் என்பது தெவம் வாழும் இடம் போல் புனிதமாக கோவில்போல் இருக்க வேண்டும். அவரால் வந்தவர் இந்த சரோஜா தேவி , அவர் இல்லைஎன்றால் இந்த சரோஜா தேவியே இல்லை.

நான் நடிகர் சிவாஜி அவர்களுடன்நடித்துள்ளேன் , அவரிடம் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன் , ஜெமினி கணேஷன்அவர்கள் எனக்கு நல்ல நண்பர் , நடிகர் சிவகுமார் மிகச்சிறந்த மனிதர்அவரிடமிருந்து நான் நிறைய நல்லொழுக்கங்களை கற்றுள்ளேன். அவருடையபுதல்வர்களும் அதே போல் மிகச்சிறந்த முறையில் வளர்ந்துள்ளனர். ஆதவன்படத்தின் படபிடிப்பின் போது நடிகர் சூர்யா என்னை மிகவும் கவனமாகபார்த்துக்கொண்டார்.

நடிகர் சிவகுமார் அவர்களுடைய அதே குணம் அப்படியேஅவருடைய புதல்வர்களுக்கும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்குசென்னைக்கு வருவது மிகவும் பிடிக்கும். நான் இங்கே சென்னைக்கு வந்தால்அனைவரும் என்னை பார்க்க வந்துவிடுவார்கள் என சோல்லி மகிழ்கிறார் சரோஜா தேவி.Post Comment

Post Comment