புனிதம் மிகுந்த பூஜை அறை ;


Posted by-Kalki Teamஎன்ன தான் வாஸ்து சாஸ்திரப்படி வீட்டைக் கட்டினாலும், இறைவனின் அருளின்றி நாம் அந்த வீட்டில் சந்தோஷமாக இருக்க முடியாது.

இப்பொழுதெல்லாம் வீடு கட்டுவதை விட, புதிதாகக் கட்டிய வீடாக விலைக்கு வாங்கத்தான் பலரும் முன்வருகிறார்கள். வாங்கும் வீடாக இருந்தாலும் சரி, கட்டிய வீடாக இருந்தாலும் சரி.. சில அறைகள் யோகம் தரும் அறைகளாக அமைய வேண்டும்.

நாம் வீடு கட்டும் பொழுது எத்தனையோ அறைகள் கட்டுகிறோம். நாம் வசதிக்காக கட்டுகிற அறையில் முக்கியத்துவம் வாய்ந்த அறை எது தெரியுமா? பூஜை அறை தான். அது மனதை ஆரோக்கியமாக வைக்கும். அடுத்தது புத்தக அறை; இது அறிவை ஆரோக்கியமாக வைக்கும். அடுத்தது சமயலறை. அது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவது. அதன்பிறகு படுக்கை அறை மற்றும் பல அறைகள்.

பூஜை அறைக்கு ஒதுக்கிய பிறகே, மற்ற இடத்தை நாம் வசதியாக வசிப்பதற்கு ஏற்றதாக அமைத்துக் கொள்ள வேண்டும். நமது வீட்டில் இறைவனுக்கு இடம் தந்திருக்கிறோம் என்று முற்றிலும் நினைப்பது தவறானது. அவனது திருச்சன்னிதியில் தான் அவனின் கருணையுடன் நாம் வசித்து வருகிறோம் என்று எண்ண வேண்டும்.

நம் வீடு என்பதை விட அவனது திருக்கோவில் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என்ன தான் வாஸ்து சாஸ்திரப்படி வீட்டைக் கட்டினாலும், இறைவனின் அருளின்றி நாம் அந்த வீட்டில் சந்தோஷமாக இருக்க முடியாது. எனவே பூஜை அறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் நம் ஆசைகள் அரங்கேறும்.Post Comment

Post Comment