தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் மகராசனம் :


Posted by-Kalki Teamஅதிக ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன இறுக்கம் போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல பயிற்சி இது. இந்த யோகா பயிற்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தோற்றம்: முதலை போன்ற தோற்றம். மகர என்றால் முதலை. இந்த ஆசனத்தின் உச்சநிலையில் உடல் முதலை போன்று தோற்றத்தைத் தரும்.

செய்முறை :

விரிப்பல் குப்புறப்படுத்து இரு கைகளையும் தலைக்கு மேல் நேராக நீட்டவும். உள்ளங்கைகள் தரையின் மீது இருக்கட்டும். முகவாய் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க, கால்கள் இணைந்து உள்ளங்கால்கள் மேல்நோக்கி இருக்கட்டும். தலை முதல் கால் வரை ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும்.

குதிகால்கள் இரண்டு ஒன்றையொன்று நோக்கியபடி, கால்களை அகட்டி வைத்துக் கொள்ளவும். கால்கள் வெளிப்புறம் நோக்கி இருக்கவேண்டும். வலது கையை மடக்கி உள்ளங்கையை இடது தோளின் மீது வைக்கவும். இதேபோன்று இடது கையை மடக்கி உள்ளங்கையை வலது தோளின் மீது வைக்கவும்.

முகவாயை இரண்டு முன் கைகளும் சேரும் இடத்தின் மீது வைக்கவும். இதே நிலையில் சிறிது நேரம் இருக்கவும். இடது உள்ளங்கையை விலக்கி இடது கையை நீட்டவும். இதே போன்று வலது உள்ளங்கையை விலக்கி வலது கையை நீட்டி பழைய நிலைக்கு வரவும்.

4 நிமிடங்கள் இந்த பயிற்சியில் ஈடுபடலாம்.

பலன்கள்: உடல் முழுவதற்கும் நல்ல ஓய்வைத் தரும். அதிக ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன இறுக்கம் போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல பயிற்சி இது.


Post Comment

Post Comment