பெங்களூரு ஏன் இதுக்கு பெயர் பெற்றதுனு சொல்றாங்க தெரியுமா?


Posted by-Kalki Teamபெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், விலை அதிகமான ப்ராண்டெட் கடைகள் , சாதாரணமா வாழவே ரொம்ப செலவு பிடிக்கும் நகரம்னு பிம்பங்கள் இருந்தாலும் இன்னமும் சாமானியனையும் அரவணைச்சு சந்தோசமா வாழ வைக்கிற, எல்லோருக்குமான நகரம் தான் பெங்களுரு.

ஷாப்பிங் போலாமா.. என்றவுடன்.. அட வா போகலாம் ணு சொல்றவங்க இப்ப நிறையபேரு.. சுற்றுலா போகிற மாதிரி ஷாப்பிங் போவது என்றாகிவிட்டது.

மிகப்பெரிய கட்டடங்கள் கட்டி, மின் வசதி , ஏசி, கார்பார்க்கிங் செய்து ஒரு ரெண்டு டிரெஸ் எடுப்பதற்குள்ள ஒரு நாள் முடிஞ்சி போயிடும்.. அதுலயும் இந்த கார் பார்க்கிங்க்கு அய்யய்யோ அப்பப்பபா...

நமக்கு எந்த தொந்தரவும் இல்லாம.. வந்தமா பேரம் பேசுனமா வாங்குனமானு போய்ட்டே இருக்குறதுதான் புல்லட் ஷாப்பிங்..

நின்னு நய் நய் னு நச்சரிக்குற பேச்சுக்கே இடமில்ல.

எதையெடுத்தாலும் 120ரூ. பிக்ஸட் ரேட்னு வச்சிருப்பாங்க. வாங்குனா வாங்கு இல்ல மத்தவங்களுக்கு வழிவிடு .. இதுதான் அவர்களின் தாரக மந்திரம்.

விதவிதமா இருந்தாலும் காசு அதிகம் என்கிற காரணத்துக்காக நம்மில் பலர் பல ஆசைகளை உள்ளுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு நடக்கின்றோம்.

அப்படி நடக்காம நிம்மதியா மனசுக்கு விருப்பப்பட்டத பெங்களூருல எங்க வாங்கலாம்?. வாங்க தெரிஞ்சிப்போம்.

சிக்பேட்

ஜவுளி கடைகளால நிரம்பி வழியும் இந்த சிக்பேட்டில் கிடைக்காத துணி வகையே இல்லை. அதிலும் பெண்களுக்கான சீலை வகைகளுக்கு மிகவும் பிரபலமானது.

கர்நாடகாவில் மற்ற இடங்களில் இருக்கும் சிறிய துணிக்கடைகளுக்கு இங்கிருந்துதான் மொத்தமாக சரக்குகள் செல்வதால் கொஞ்சம் குறைந்த விலைக்கே நல்ல துணி எடுக்கலாம்.

வழக்கமாக நீங்க வாங்குற துணிக்கு பண்ற செலவைக் காட்டிலும் பாதி விலைக்கு தரமான துணிகள் கிடைக்கும். தினமும் சண்டையிடுற உங்க மனைவி, காதலிக்கு வாங்கி கொடுத்து அசத்துங்க..

பாஸ் பாஸ்...மறக்காம அந்த பில்ல கிழிச்சி போட்டுடுங்க.. அப்றம் இன்னும் ரெண்டு வாங்கிட்டு வரவேண்டிதானனு சண்டை வரப்போது...

பிரிகேட் ரோடு:

எங்கு திரும்பினாலும் இருக்கும் ப்ரண்டெட் கடைகள், வெளிநாட்டு உணவகங்கள் இருந்தாலும் அதற்கு நிகராக சிறிய கடைகளும் இங்கே அதிகம். செலவு செய்யலாம் ஆனாலும் ரொம்ப முடியாது என்று யோசிப்பவர்களுக்கான இடம் இது.

பெங்களூரு முழுக்க முழுக்க பெண்களுக்கான ஷாப்பிங் உலகம்

தி திபத்தியன் பிளாசா ;

இங்கிருக்கும் தி திபத்தியன் பிளாசா பேரம் பேசி வாங்க தெரிந்தவர்களுக்கான ஆடுக்களம். துணி வகைகள், காலணிகள் மற்றும் அலங்காரப்பொருட்கள் பேரம் பேசி கம்மி விலையில் இங்கே வாங்கலாம். நீங்கள் இங்கே ஷாப்பிங் செய்தது களைத்து போகாமல் இருந்தால் சரி.

கமர்சியல் ஸ்ட்ரீட் :

இந்த இடத்திற்கு இந்தியா முழுக்க இருந்தும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் ஷாப்பிங் செய்ய குவிகின்றனர்.

கைவினை பொருட்கள் ;

கலைநயம் மிக்க கைவினை பொருட்கள், வேலைப்பாடு மிகுந்த தங்க, வெள்ளி நகைகள், கல்யாணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க தகுந்த இடம் இது

பழங்கால பொருட்கள் ;

பழங்கால பொருட்கள் சேகரிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல கடைகள் இங்கே உண்டு. புதிதாக வருபவர்கள் எங்கே இருக்கிறோம் என்று குலம்பிபோய்விடும் அளவிற்க்கு குறுக்கும் நெடுக்குமாக நீளும் இந்த தெரு விழாக்கங்களில் களைகட்டும்.

ஜெயா நகர் 4 பிளாக் :

பெண்களுக்கு தேவையான சின்ன சின்ன அலங்காரப்பொருட்கள் முதல் வீட்டிற்க்கு தேவையான பர்னிச்சர் வரை குறைந்த விலையில் வாங்கலாம். பூஜை செய்ய தேவையான பூக்கள் முதல் பழங்கள் வரை இங்கே இருக்கும் கடைகளில் நியாயமான விலைக்கு வாங்க முடிகிறது. மாலை நேரங்களில் இங்கே கிடைக்கும் சுவையான உணவுகளும் வெகு பிரபலம்.

சாலையோர கடை :

பெரிய பெரிய கடைகளில் எல்லாம் கிடைக்காத விதவிதமான தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் இங்கிருக்கும் சாலையோர கடைகளில் நமக்கு கிடைக்கும்.

மரத்தஹல்லி :

பெங்களுருவுக்கு சற்று வெளியே தள்ளி அமைந்திருக்கும் இங்கு பிராண்டெட் பொருட்கள் மிக குறைந்த விலைக்கு விற்கும் கடைகள் நிறைய உள்ளன. எலெக்ட்ரானிக் பொருட்கள், சோபாக்கள் மற்றும் அலங்கார விளக்குகள் போன்றவை இங்கே இருக்கும் கடைகளில் கிடைக்கின்றன.

இது தவிர ஷாப்பிங் முடித்து விட்டு பொழுது போக்க திரையரங்குகள், உணவகங்கள், குழந்தைகளுக்கான கேளிக்கை விளையாட்டு மையங்கள் போன்றவை இங்கே அதிகம். முக்கியமாக பெங்களுரு நகர வாகன நெரிசலை வெறுப்பவர்கள் மரத்தஹல்லி சென்று கவலையில்லாமல் பொருட்களை வாங்கி வரலாம்.Post Comment

Post Comment