ஆசியாவின் ஒரே டிரைவ் இன் பீச்சுக்கு ஒரு பைக் ரைடு போலாமா ?


Posted by-Kalki Teamபைக் ரைடு போக யாருக்குத்தான் ஆசையில்ல. சுற்றிலும் மக்கள் சூழ கடற்கரையில் மின்னல் வேகத்தில் பைக் ரைடு செய்ய ஆசையா அப்போ இதுதான் உங்களுக்கு சரியான இடம்.

ஆசியாவிலேயே டிரைவ் இன் வசதி கொண்ட ஒரே பீச் இதுதான். முழப்பிலங்காடு கடற்கரை. இயற்கை தன் ஒட்டுமொத்த அழகையும் குத்தகைக்குக் கொடுத்த ஊரான கேரளாவில் அமைந்துள்ளது இந்த கடற்கரை.. வாங்க ஒரு ரைடு போய்ட்டு வரலாம்....

பீச்சில் ஒரு பைக் ரைடு

முழப்பிலங்காடு கடற்கரை 4 கி.மீ தொலைவு வரை நீண்டுள்ளது. இது மணற்பாங்கான சவாரிக்கு ஏற்றது. இதன் முழு நீளத்திற்கும் ஒருவரால் பயணம் செய்ய முடியும்.

சூரிய மறைவு ;

இந்தக் கடற்கரையில் உள்ள தென்னந்தோப்புகள் சூரிய வெளிச்சத்தைத் தரைக்கு ஊடுருவ விடாமல் தடுத்துவிடும்

கடல் திருவிழா

இங்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் பீச் திருவிழாவை ஆயிரக்கணக்கான இளைஞர்களும், சாகச பயணிகளும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கடல் திருவிழாவில் மக்கள்

இந்த திருவிழாவில் மக்கள் அதிகளவில் கலந்து கொண்டு மனமகிழ்வர்.

அழகிய கடற்கரை

கண்ணூரிலுள்ள அழகிய கடற்கரையின் தோற்றம்

கடற்கரையிலுள்ள பாறைகள்

பெரிய கரும்பாறைகள் பரந்து கிடப்பதால், அது கடல் நீரை உள்ளே வரவிடாமல் தடுத்து பாறைகளுக்கிடையே அங்கங்கே குளம் போல நீர் தேங்கிக் கிடப்பது நீச்சல்காரர்களுக்கு வசதியாக உள்ளது.

கடற்கரை தீவு

அமைதியும் அழகும் மிகுந்த இந்த இடம் மற்ற இடங்களிலிருந்து தனித்து இன்னும் பலரால் அறியப்படாத இடமாக உள்ளது.

எப்படி செல்லலாம்?

முழப்பிழ கடற்கரை தலச்சேரியிலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைத்துள்ளது.

அருகில் உள்ள நகரங்கள்/இரயில் நிலையங்கள் :

தலச்சேரி - 7 கி. மீ.,

கண்ணூர் - 15 கி. மீ.,

அருகில் உள்ள விமான நிலையம்:

கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் - 100 கி. மீ

பேரளசேரி படிக்கிணறு:

கண்ணூர் நகரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் கண்ணூர்-கூத்துபரம்பா நெடுஞ்சாலையில் உள்ள பேரளசேரி எனும் சிறு நகரில் இந்தப் பேரளசேரி படிக்கிணறு அமைந்துள்ளது. இந்த பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை நுட்பத்துடன் அமைந்திருக்கும் கிணற்றின் தோற்றம் ராஜஸ்தானிய படிக்கிணறுகளை ஒத்திருக்கிறது.

தர்மதம் ஐலேண்ட்

கண்ணூர் நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் தர்மதம் ஐலேண்ட் அமைந்துள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவுத்திட்டு தென்னை மரங்கள் மற்றும் பசுமையான தாவரச்செழிப்புடன் காட்சியளிக்கிறது. இந்த தீவுக்கு சென்று வர தனியார் படகு சேவைகள் உண்டு

பழசி அணை

தமிழ் நாட்டில் கட்டபொம்மனுக்கு இணையாக கேரளத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட ராஜாவான பழசிராஜாவின் பெயர் இந்த அணைக்கு வைக்கபட்டுள்ளது. இது கண்ணூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் இந்த அணைத்தேக்கத்தில் படகுச்சவாரி சேவைகளை சுட்ட்றுலாப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்துள்ளது. அணையை ஒட்டியே உள்ள ஒரு தோட்ட பூங்காவில் பல பொழுதுபோக்கு அம்சங்களை பயணிகளுக்காக கொண்டுள்ளது.Post Comment

Post Comment