சூரியனார் கோவிலின் ஒன்பது அற்புதங்கள் :


Posted by-Kalki Team



சூரிய தோஷ நிவர்த்திக்காக சூரியனார் ஆலயத்தில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். சூரியனார் ஆலயத்தின் ஒன்பது விதமான தனிச் சிறப்புகளை பார்க்கலாம்.

ரத சப்தமி விழாவை வெகு விமரிசையாக கொண்டாடும் தலங்களில், சூரியனார் கோவிலும் ஒன்று. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து வடக்கே 2 கிலோமீட்டர் தூரத்திலும் சூரியனார் கோவில் உள்ளது. சூரிய தோஷ நிவர்த்திக்காக இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். தோஷ நிவர்த்திக்கு புகழ்பெற்ற தலம் இது. இந்த ஆலயத்தில் ஒன்பது விதமான தனிச் சிறப்புகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.

* தென்னாட்டில் சூரியனுக்கு என்று அமைந்துள்ள தனிக் கோவில் இது.

* நவக்கிரகங்கள் ஒவ்வொருவருமே தனித் தனிக் கோவில்களில் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் ஸ்தலம்.

* சூரிய பகவானை அவர் சன்னிதியில் தரிசிக்கும் பொழுது குரு பகவானின் அருட்பார்வையும் ஒரு சேர கிடைக்கும் கோவில்.

* வாகனங்களும், ஆயுதங்களும் இல்லாமல் அமைதி தவழும் இன்முகங்களுடன், நவக்கிரகங்கள் அருள் வழங்கும் தலம்.

* ஒரு கோவிலுக்குள் நவக்கிரகங்களுக்கு என தனித்தனி சன்னிதிகள் அமைந்த ஒரே தலம்.

* நவ நாயகர்களையும் முதலில் இடமாக சுற்றி வந்து பின் ஒன்பது முறை வலம் வரும் அமைப்புள்ள தலம்.

* இரண்டு அசுபக்கிரகங்களுக்கு இடையில் ஒரே சுபக்கிரகம் என்ற வரிசை முறையில் அமைந்துள்ள தலம்.

* நவக்கிரகங்களும் ஒன்று சேர்ந்து விநாயகர் பிரதிஷ்டை செய்து அவர் அருளால் தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொண்ட தலம்.

* ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் தோஷ பரிகாரம் செய்யும் படி அமைந்துள்ள தலம்.


Post Comment

Post Comment