ரெட்லீப் சீசன் துவக்கம் சுற்றுலா பயணிகள் ஆர்வம் :


Posted by-Kalki Teamகுன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது அமெரிக்கா, இங்கிலாந்து, லண்டன், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மலர் செடிகள் கொண்டு வரப்பட்டு மலைப்பாதை மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் காட்டேஜ்களை ஒட்டியுள்ள பகுதியிலும் நடவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்கால மலர்களாக விளங்கி வரும் ரெட்லீப் செடிகளை உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

பச்சை நிறத்திலுள்ள இதன் இலைகள் இளம் சிவப்பு, சிவப்பு, மஞ்சள் என பல்வேறு நிறங்களில் மாறி மலர்கள் போல் பூத்து குலுங்குவது வாடிக்கையாக உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை இதன் சீசன் காலம் என்பதால், கலர் மாறும் தன்மை கொண்ட இலைகள் மலை மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மலர் கொத்துகள் கொடுத்து வரவேற்பது போல் உள்ளது.Post Comment

Post Comment