அஜித்துக்கு போட்டியாக வருவாரா சல்மான் கான்?


Posted by-Kalki Teamஅஜித்தின் தல 57 படம் ரம்ஜான் ரிலீசாக திரைக்கு வர உள்ளநிலையில், அஜித்துக்கு போட்டியாக சல்மான் கான் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `தல 57. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன், பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்து வரும் `தல 57 படத்தை ரம்ஜான் வெளியீடாக ஜுன் 23-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சல்மான் கானின் `டியூப் லைட் படத்தை ரம்ஜானை முன்னிட்டு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் படத்தையும் அதே நாளில் வெளியிட முருகதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post Comment

Post Comment