சினிமாவிலும் கமலுக்கு மகளானார் ஸ்ருதி ஹாஸன் :


Posted by-Kalki Teamவாய்ப்புக் கிடைத்தால் கமல் ஹாஸனுடன் இணைந்து நடிப்பேன் என்று சொல்லிக் கொம்டிருந்த ஸ்ருதி ஹாஸனின் ஆசை ஒருவழியாக நிறைவேறிவிட்டது.

யெஸ்... கமல் நடிக்கும் மலையாளப்படம் ஒன்றில் அவருக்கு மகளாகவே நடிக்கிறார் ஸ்ருதி ஹாஸன்.

கமல் ஹாஸன் நாடறிந்த நடிகர் என்றால், அவர் மகள் ஸ்ருதி ஹாஸனோ நாட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் இவருக்கு நல்ல மார்க்கெட்.

மீடியாக்கள் கேள்வி :

கடந்த சில வருடங்களாகவே அப்பா கமலுடன் படத்தில் இணைந்து நடிப்பீர்களா? என பத்திரிகையாளர்கள் ஸ்ருதியைக் கேட்டு வருகின்றனர். அதற்கு அவர், அப்பா மிகப் பெரிய நடிகர். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது," என்று கூறி வந்தார்.

ஆசை :

நேற்றும் அப்படி ஒரு கேள்வி எழுந்தபோது ஸ்ருதி கூறுகையில், "வீட்டில் இருக்கும் போது அப்பாவுடன் நடிப்பு ஒத்திகை பார்த்திருக்கிறேன். நடனம் கூட இணைந்து ஆடி இருக்கிறேன். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இப்போது அந்த வாய்ப்பு அமைந்துள்ளது," என்றார்.

மலையாளத்தில் :

என்ன வாய்ப்பு அது? கமல் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குநர் சஞ்சீவ்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார். இதில் கமல் மகளாகவே ஸ்ருதிஹாசன் நடிக்கிறாராம்.

செம பிஸி :

ஸ்ருதி ஹாஸன் இன்றைய தேதிக்கு கமல் ஹாஸனை விட செம பிஸி. தமிழ், தெலுங்கு, இந்தியில் தலா இருபடங்களை ஒப்புக் கொண்டுள்ளார்.Post Comment

Post Comment