ஐபோன் போன்றே உருவாகும் சாம்சங் கேலக்ஸி S8 :


Posted by-Kalki Teamசாம்சங் கேலக்ஸி S8, அந்நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் என கூறப்படும் நிலையில் இதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி S8 குறித்த புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் ஐபோன் போன்று உருவாகி வருவது தெரியவந்துள்ளது.

புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் மற்றும் 6.2 இன்ச் என இரண்டு வித டிஸ்ப்ளே அளவுகள் கொண்டிருக்கும் என்றும் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன் S8 பிளஸ் என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டன் நீக்கம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கொரியாவில் இருந்து வரும் தகவல்களை பொருத்த வரை சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் ப்ரோடோடைப் மாடல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் இவை சாம்சங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவருக்கு அனுப்பப்பட்டு அவர்களின் ஒப்புதல் விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா அமைப்பும், S8 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதே போன்ற அமைப்பு ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் வெளியிட்ட நோட் 7 தோல்வியுற்று, இதன் காரணமாக அவற்றின் விற்பனை திரும்ப பெறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதோடு வணிக ரீதியாக சாம்சங் நிறுவனத்திற்கு இது பெரும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போன வருடம் வெளியான நோட் 7 ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறியதால் திரும்ப பெறப்பட்டது.

எனினும் இந்த ஆண்டு மொத்தம் 60 மில்லியன் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது கடந்த மூன்று ஆண்டுகளை விட அதிகமான இலக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. சாம்சங் S8 ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Post Comment

Post Comment