உடல் சூட்டை குறைக்கும் வருண் முத்திரை :


Posted by-Kalki Teamவறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த முத்திரையை தினமும் செய்யலாம். இதனால் உடல் சூடு குறையும். இந்த முத்திரையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த முத்திரையை தினமும் செய்யலாம். உடல் சூடு குறையும். நா வறட்சி போக்கி தாகம் தணியும்.

உடலில் நீரின் அளவு சரியான நிலையில் இருக்க உதவும். இதனால் உடலில் ஏற்ப்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடலில் நீரின் அளவு மறுபடுவதே பல நோய்கள் வருவதற்கு ஆரம்பமாக இருக்கிறது.

இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.. இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் இந்த முத்திரை உதவுகிறது.

செய்முறை :

சுண்டுவிரலின் நுனியால் கட்டைவிரலின் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். விரல்கள் 3 முதல் 5 நிமிடம் வரை தொடர்ந்து தொட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

15 முதல் 20 நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.


Post Comment

Post Comment