பரங்கிக்காய் கார ரொட்டி :


Posted by-Kalki Teamஎன்னென்ன தேவை?

இட்லி அரிசி - 1 கப்,

தோல் சீவி, துருவிய பரங்கிக்காய் - 1 கப்,

காய்ந்தமிளகாய் - 5,

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,

உப்பு - தேவைக்கு,

கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

கறிவேப்பிலை - 1 கொத்து,

நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,

எண்ணெய்- தேவைக்கு,

வெல்லம் - 1 டீஸ்பூன்,

கடுகு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

இட்லி அரிசியை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அதில் பரங்கிக்காய், காய்ந்தமிளகாய், புளி, உப்பு, வெல்லம் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக கெட்டியாக அரைக்கவும். கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து மாவுடன் சேர்க்கவும். கடுகு தாளித்து கறிவேப்பிலை-மல்லித்தழை, மாவுடன் சேர்த்துக் கலக்கவும். ஒரு பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி, மாவை சாத்துக்குடி அளவு உருண்டை களாக எடுத்து, போளியைப் போல் தட்டி, காய வைத்த தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுத்து பரிமாறவும்.Post Comment

Post Comment