சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி - அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன் திரையீடு :


Posted by-Kalki Teamசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன் ஆகியப் படங்கள் சிறப்பு பிரிவின்கீழ் திரையிடப்படுகின்றன.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் தள்ளிவைக்கப்பட்ட சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அடிமைப் பெண் . ஆயிரத்தில் ஒருவன் ஆகியப் படங்கள் சிறப்பு பிரிவின்கீழ் திரையிடப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் தமிழ் சினிமா தயாரிப்பு தொடர்பான பல சங்கங்களை சேர்ந்த இன்டோ சினி அப்ரிசிசேஷன் என்ற அமைப்பு கடந்த ஐந்தாண்டுகளாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச திரைப்பட விழாவை சென்னை நகரில் நடத்தி வருகிறது.

அவ்வகையில், கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதியில் இருந்து 22-ம் தேதிவரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.

இதையடுத்து, சென்னை சர்வதேச திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, ஜனவரி 5 முதல் 12 வரை ஒருவார காலத்துக்கு இந்த விழா நடைபெறவுள்ளது. 65 நாடுகளை சேர்ந்த 165 சிறந்த படங்கள் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன.

இந்நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை கேசினோ தியேட்டரில் நடைபெறும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பிரிவின்கீழ், எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா முதன்முதலாக சேர்ந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் ஜெயலலிதா இருவேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ஜீவாவாகவும், இளவரசி பவளவல்லியாகவும் நடித்துள்ள அடிமைப் பெண் ஆகியப் படங்கள் திரையிடப்படுகின்றன.


Post Comment

Post Comment