இஸ்லாமியர் கட்டிய இந்து கோவில் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இங்க வாங்க!!


Posted by-Kalki Teamகர்நாடக மாநிலத்தில் மங்களூரு அருகே அமைந்துள்ளது இந்த சக்திவாய்ந்த கோவில். இந்த ஊரின் பெயர் பாப்பநாடு. அவ்வூரில் வணிகம் செய்து வந்த ஒருவரின் பெயரால் இந்த பெயர் பெற்றதாகத் தெரிகிறது.

வேண்டிய வரம் தருவதாக நம்பப்படும் இந்த கோவிலில் துர்க்கையம்மன் வீற்றிருக்கிறாள். பாப்பநாடு துர்க்கை பரமேஸ்வரி கோவில் கர்நாடகத்தில் பிரபலமான கோவில் ஆகும்.

மங்களூரு நகரம் கடற்கரைகள் மட்டுமல்லாது அங்குள்ள பழமைவாய்ந்த கோவில்களுக்கும் பெயர் பெற்றது. துர்க்கை பரமேஸ்வரியம்மன் கோவில் சாம்பவி ஆற்றின் கிளையாறு ஒன்றின் மீது அமைந்துள்ளது. மூலவராக சிவலிங்கம் அமைந்துள்ளது. நந்தினி மற்றும் சாம்பவி ஆறுகள் சேறுமிடத்தில் சிவன் அமர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.

மங்களூருவில் உள்ள ஒவ்வொரு ஆலயமும் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். துர்க்கை பரமேஸ்வரியம்மன் ஆலயமும் அப்படி ஒரு சிறப்பைக் கொண்டுள்ளது. இந்த கோவிலைக் கட்டியது ஒரு இஸ்லாமிய வணிகராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவர் பெயர் பாப்பா. ஒருமுறை அந்த ஆற்றில் சென்று கொண்டிருந்த பாப்பாவுக்கு, ஒரு வசீகரிக்கும் அசரீரீ ஒலி கேட்டதாம். இதனால் படகை நடு ஆற்றில் நிறுத்திய அவர், அந்த குரல் சொன்னதைக் கேட்டு, இந்த இடத்தில் கோவிலைக் கட்டினார் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

இதன்காரணமாகவே, இவ்வூருக்கு பாப்பநாடு என்றும், இக்கோவிலின் பெயர் பாப்பநாடு துர்க்கையம்மன் கோவில் என்றும் ஆகியதாக தெரிவிக்கின்றனர்.

வேறு சிலர், இங்கு ஆட்சி புரிந்த கொடுங்கோல் மன்னரை அழிக்க நினைத்த விஷ்ணு, மன்னருடன் போர்புரிய, பிரம்மனிடம் வரம் பெற்று வந்த அம்மன்னன், விஷ்ணுவுடன் போரிட்டு வென்று அவரது கேடயத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம். பின்னர், அதை மீட்க, கிழவி வடிவில் வந்த பகவதி மன்னரிடம் உதவி கேட்க, மன்னரோ என் அரண்மனைக்குச் செல்.. என் மனைவியிடம் எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள் என்றாராம்.

திட்டமிட்டு கிழவி வேடத்தில் வந்த பகவதி விஷ்ணுவின் கேடயத்தை மீட்டது மட்டுமல்லாமல், மன்னரையும் அடிபணிய வைத்ததாகவும், அந்த இடமே தற்போது கோவிலாக உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

நடை திறப்பு:

காலை 5.30 மணி முதல் மதியம் 2 மணி வரையும், பின்னர் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவிலின் நடை திறந்திருக்கும்.

அருகிலுள்ள பேருந்து நிலையம்:

முல்கி பேருந்து நிலையம், கர்நாடகம்


Post Comment

Post Comment