வயிற்றுப் பிரச்சனைகளை போக்கும் ஷஷாங்காசனம்!


Posted by-Kalki Teamயோகா பயிற்சியை வெறும் தரையில் செய்யக்கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும், அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும் போது தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.

ஷஷாங்காசனம்

ஷஷாங்க என்ற வடமொழி வார்த்தைக்கு முயல் என்று பொருள். இந்த ஆசனத்தில் உடலை வளைத்து அமர்ந்திருக்கும் தோற்றம், முயலைப் போலவே இருப்பதால் ஷஷாங்காசனம் என்று பெயர்.

வஞ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு கைகளையும் பின்பக்கமாகக் கொண்டுசெல்லவும். இடது கை மணிக்கட்டை, வலது கை விரல்களால் பிடித்துக்கொள்ளவும்.

இடுப்பைத் தூக்காமல் மெதுவாகக் குனியவும். முடிந்தால் நெற்றியால் தரையைத் தொடலாம். ஒரே நாளில் தரையைத் தொட முடியாது. தினமும் பயிற்சி செய்யச் செய்ய, தானாக வந்துவிடும்.

மனதுக்குள் 1 முதல் 20 வரை எண்ணும் வரை அப்படியே இருக்கவும். பிறகு மெதுவாக நிமிர்ந்து உடலை நேராகக் கொண்டுவந்து, கைகளைப் பிரித்து, ஆரம்ப நிலை வஜ்ராசனத்துக்கு வரவும்.

இதைத் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் ஐந்து முறை செய்யலாம்.

ஷஷாங்காசனத்தை தொடர்ந்து செய்வதால் குடல் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். மலச்சிக்கலைக் போக்கும். ஐலதோஷம், வாயு பிரச்சனை, பசியின்மை போன்றவற்றை சரி செய்யும். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, படுக்கையில் சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்சனைகளுக்கு அந்த ஆசனம் சிறந்த தீர்வாகும்.Post Comment

Post Comment