புஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்!


Posted by-Kalki Teamபுஜங் என்றால் பாம்பு. புஜங்காசனம் என்பது பாம்பைப் போல வளைத்தல் என்று அர்த்தம். இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம். குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான பெண்கள் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த ஆசனததை தினமும் காலை மாலை இரு வேளை செய்து வந்தால், முதுகுத் தண்டு பலம் பெற்று முதுகு வலி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

புஜங்காசனம் செய்முறை:

முதலில் ஒரு விரிக்கையை தரையில் விரியுங்கள். இப்போது குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தலைக்கருகே, தரையில் படுமாறு வைக்க வேண்டும். கால்விரல்கள் தரையில் படவேண்டும். குதிகால்கள் வானம் பார்த்தபடி இருக்க வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை ஆழ்ந்து விடுங்கள். இந்த நிலையில்தான் ஆரம்பிக்க வேண்டும்.

இப்போது உள்ளங்கைகளை மெதுவாக ஊன்றி, தலையை மேலே உயர்த்துங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னாடி வளையுங்கள். இடுப்பு வரை தரையில் ஒட்டி இருக்க வேண்டும். கைகள் வளைக்காமல் நேராக ஊன்றி இருக்க வேண்டும். இந்த நிலை தான் பாம்பு நிலை என்பர். இப்போது மெதுவாய் மூச்சு விடுங்கள். 15 வினாடி அப்படியே இருக்க வேண்டும். அதன் பின் மறுபடியும் பழைய நிலைக்கு வாருங்கள்.

புஜங்காசனத்தின் பலன்கள்:

பெண்களுக்கான அற்புத பலன்களை இந்த ஆசனம் தரும். முகுகெலும்பை பலப்படுத்தும். தோள் மற்றும் பின் முதுகிற்கு வலிமையை அளிக்கும். முதுகுவலி, இடுப்பு வலி நீங்கும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இடுப்பில் இருக்கும் கொழுப்பினைக் குறைக்கும். மலச்சிக்கல் அகலும்.Post Comment

Post Comment