விஜய்-அட்லி படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள் :


Posted by-Kalki Teamவிஜய், அட்லி இணையவிருக்கும் அடுத்த படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...

விஜய் தற்போது தனது 60-வது படமாக பைரவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகி தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இதில் மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்கவிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி அடிபடுகிறது.

ஜோதிகா ஏற்கெனவே விஜய்யுடன் குஷி, திருமலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமந்தா கத்தி, தெறி ஆகிய படங்களில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர்கள் நடிக்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிகாரப்பூர்வமில்லாததாக இருந்தாலும், விரைவில் இதுகுறித்து அறிவிக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Post Comment

Post Comment