உங்களால் எளிதில் நம்ப முடியாத மாய உலகம்...இவற்றை தெரியுமா?


Posted by-Kalki Teamமகாராஷ்டிர மாநிலம் சிவபூர் என்ற கிராமத்தில், இந்த ஆச்சர்யம் நடைபெறுகிறது. அதாவது, இங்குள்ளவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை மட்டும் பயன்படுத்தி கிட்டத்தட்ட 70 கிலோ எடையுள்ள பாறையைத் தூக்குகின்றனர். 800 வருடங்களுக்கு முன் ஜிம்மாக இருந்த இந்த இடம் தற்போது புனித தலமாக உள்ளது. இங்குள்ளவர்கள் பதினொரு பேர் தங்களது ஒற்றை விரலால் பாறையைத் தூக்கிப் போட்டு பிடிக்கின்றனர்.

அடடே.. பெரிய பயில்வான்களா இருக்காங்களே...

அசாம் மாநிலம் மாயாங் எனும் கிராமம் லேண்ட் ஆப் பிளாக் மேஜிக் என்று அழைக்கப்படுகிறது. கவுகாத்தியிலிருந்து 40 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சில மனிதர்கள் காற்றில் மாயமாகின்றனர். சிலர் விலங்குகளாக மாறுகின்றனர். இது மாதிரியான மாயஜாலங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளனர் இந்த கிராம மக்கள். மாயாங் இந்த கிராமத்திற்கு இந்த பெயர் பொருத்தமானதுதான்....

நம்மளும் அந்த வித்தைய கத்து வச்சிக்கிட்டா கடன்காரன் வந்தா எஸ் ஆயிடலாம்ல....

அசாம் மாநிலம் ஜடிங்கா எனும் பகுதியில் உள்ளது போரெய் மலை. ஒவ்வொரு மழைக்காலத்திலும், இங்கு வரும் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றனவாம். செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் பெரும்பாலும் இப்படி நிகழ்கின்றன என்று தெரிவித்த இயற்கை ஆர்வலர் இ.பி.கீ 1960ல் இதனை உலகம் உற்றுப்பார்க்கும் படி செய்தார்.

சொயிங்குனு போகுது...... சூசைட் பண்ண

லாடாகில் இருக்கும் மிகப்பெரிய நகரமான லெஹ்இல் இருந்து 30கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த காந்த மலைகள். கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இங்கு அளவுக்கு அதிகமான அறிவியலாளர்களால் இன்றும் விளக்க முடியாத அளவு அதீத புவியிர்ப்பு சக்தி இருக்கிறது. இதன் காரணமாக நாம் வாகனங்களை இயக்கா விட்டாலும் 20 கி.மீ வேகத்தில் அவை நகர்கின்றன. அவைகளை நாம் பிடிகா விட்டாலும் கீழே விழுவதில்லை. மேலும் இந்த பகுதியின் மேல் பறக்கும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இந்த அதீத புவி ஈர்ப்பில் இருந்து தப்பிக்க கூடுதல் வேகத்துடனேயே பறக்கின்றன. லடாக்கிர்க்கு சுற்றுப்பயணம் செய்தால் இங்கும் தவறாமல் சென்று வாருங்கள்.

நல்ல ஐடியாவா இருக்கே... பிரேக் டவுன் சமயத்துல ஹெல்புல்லா இருக்கும்

இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தினர் தங்களை மாவீரர் அலெக்சாண்டரின் வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொண்டு தனி அரசாங்கத்தையே நடத்துகின்றனர். உலகின் மற்ற இடங்களிலிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு, மலையில் மீது வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர் இவர்கள்.

அலெக்சாண்டரோட வாரிசுகளாம்...

உலகின் மிகத் தூய்மையான கிராமம் இந்தியாவில் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா. மேகாலயாவில் அமைந்துள்ள இந்த கிராமம் கடவுளின் பூங்கா என்று அழைக்கப்படுகிறது.

தூய்மையான இந்த கிராமத்தைப் பார்வையிட உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இந்தியாவுலயா இருக்கு..... ரெம்ப தப்பாச்ச

இந்த கிராமத்தில் அப்படி என்ன இருக்கிறது மற்ற கிராமங்களைப் போலதானே உள்ளது என்கிறீர்களா.. சற்று கூர்ந்து பாருங்கள். இந்த கிராமத்தில் உள்ள எந்த வீடுகளிலும் கதவுகளே கிடையாது. இதற்கு காரணம் இந்த கிராமத்தில் களவுகள் நடைபெறாது என்பதுதான். அவ்வளவு நல்லவிங்க போல....

சரி நீங்க வெளிய கிளம்பும்போது கதவ பூட்டிட்டு போறீங்களா....

கல்லறையருகில் உணவு விடுதியா.... உணவு விடுதிக்குள் கல்லறையா .. அப்படின்னு சந்தேகம் வரலாம்... இப்படி ஒரு வித்தியாசமான விடுதி அகமதாபாத்தில் அமைந்துள்ளது. கல்லறைகள் எங்கள் முன்னோர்களின் நினைவுகள். அவைகள் எப்போது எங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியது என்கிறார் உரிமையாளர்.

அதுக்குள்ளேர்ந்து திடீர்னு யாரும் எழுந்து வராம இருந்தா சரி...

கடலில் தீவு இருப்பதை பார்த்துருப்பீர்கள். ஆற்றில் ஒரு தீவு உள்ளது. அதும் இந்தியாவில் இருக்கிறது. மிகவும் அழகான, வானத்து நீலத்தை பூமியில் பிரதிபலிக்கும் இந்த ஆறு காண்போரை கவர்ந்து இழுக்கும் தன்மைவாய்ந்தது.

இந்த ஆற்றுத் தீவின் அருகில் சென்றால் சொர்க்கத்தில் இருப்பதை உணரமுடியுமாம். நம்ப முடியவில்லையா...

நம்புனாத்தான் சோறு போடுவாங்களாம் பாஸ்

இது என்னவோ சினிமால வர்ற காமெடியன் பேருனு நினைச்சிறாதீங்க.. இது சக்தி வாய்ந்த கடவுளின் பெயர். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஜோத்பூர் என்னும் இடத்தில் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி யார் தெரியுமா ஒரு புல்லட். இந்த புல்லட்டுக்கு மாலை அணிவித்து, பூசையெல்லாம் செய்கிறார்கள்.

அட... ஆச்சர்யாமா இருக்குல... இல்லையா ?

அப்றம் நாங்கனா யாரு... மைல் கல்லையே கோவிலாக்குனவங்கப்பா....


Post Comment

Post Comment