ஆன்லைனுக்கு லைக் போடுங்க! :


Posted by-Kalki Teamகண் கவரும் படாடோபமான வண்ண விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் பாக்கெட்டை பணால் செய்யும் நோக்கத்தில் மால்கள் ஒரு பக்கம். அ முதல் ஃ வரை ஒரே இடத்தில் குவித்து ஒரு பொருள் வாங்கப் போகுமிடத்தில் தேவையே இல்லாமல் நான்கு எக்ஸ்ட்ரா பொருட்களை வாங்க வைக்கும் வணிக வளாகங்கள் மறு பக்கம். சூப்பர் மார்க்கெட்டுகளாக உயர்மாற்றம் செய்யப்பட்ட பலசரக்கு மளிகைக் கடைகளின் விலையேற்றம் இன்னொரு பக்கம்.

வியர்வை சொட்டச் சொட்ட தி.நகர் கூட்ட நெருக்கடியில் ஷாப்பிங் செய்து பர்ஸை பறி கொடுக்கும் பரிதாபம் மற்றொரு பக்கம். இப்படி தலை விரித்தாடும் ஷாப்பிங் சங்கடங்களை ரப்பர் பேண்டு போட்டு ஆசுவாசப்படுத்த வந்திருக்கும் வரப்பிரசாதம்தான் ஆன்லைன் ஷாப்பிங்! மேற்சொன்ன அனைத்து இடங்களிலும் கிடைக்கும் பொருட்கள் அதே தரத்தில், அதை விட குறைவான விலையில் உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து டோர் டெலிவரி செய்வது, ஆன்லைன் ஷாப்பிங்கின் ஆகச்சிறந்த பிளஸ் பாயிண்டுகளில் ஒன்று.

வெளிச் சந்தைகளில் சாதாரணமாகக் கிடைக்காத அல்லது வாங்க முடியாத பொருட்களையும் இணைய சந்தையில் நல்ல தரத்தில் நயமான விலையில் பெறலாம் என்பது அடுத்த ஹைலைட். இது மட்டுமா? காதலர் தினம், பிறந்த நாள், திருமண நாள், அன்னையர் தினம் போன்ற விசேஷ தினங்களில் சிறிய பரிசுப் பொருட்கள், பூங்கொத்து, கேக், சாக்லெட் என்றெல்லாம் அன்புக்கு உரியவருக்கு நீங்கள் விரும்பும்படி அனுப்பி வைக்கலாம்.

பொருளைப் பற்றிய சுருக்கமான குறிப்பு, விலை, நீளவாட்டு - பக்கவாட்டுத் தோற்றம் முதற்கொண்டு காட்டி நாம் வாங்க உத்தேசிக்கும் பொருளின் தெளிவான ஐடியாவை இணைய ஷாப்பிங் கொடுக்கிறது. வாங்க விரும்பும் பொருள் போலவே வேறு என்னென்ன பொருட்கள் அப்போது புழக்கத்தில் உள்ளன, விலை வித்தியாசம், சிறப்பம்சங்கள் எனத் தெளிவான ஒப்பீட்டு அட்டவணையும் கொடுக்கிறது. எப்படி இவ்வளவு விலை குறைவாகக் கிடைக்கிறது என்ற ஐயம் எழலாம்.

இந்த இணைய வர்த்தகத்தின் முக்கிய பாயின்ட்டே, இடைத்தரகர்கள் இல்லை என்பதுதான். தயாரிப்பாளரிடம் இருந்து நேரடியாக உபயோகிப்பாளருக்கு பொருட்கள் சென்று சேர்கிறது. அதற்கான ஷிப்பிங் கொரியர் சார்ஜும் நாமே கட்டி விடுகிறோம் சில ஷாப்பிங் வலைத்தளங்களில் ஃப்ரீ ஷிப்பிங் உண்டு!.

அதனால், சரக்கு கொள்முதல் செய்வது, மொத்த சில்லறை விற்பனையாளர்கள், இடைத் தரகர்கள் என்று எந்த அதிகப்படி செலவும் இல்லை. இணைய வர்த்தக விற்பனையாளரும் பெரிய கடை போன்ற செட்-அப் எதுவும் வைத்திருக்க வேண்டியதில்லை. வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்துவதற்கும் நிறைய வழிமுறைகள் உள்ளன.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பணம் செலுத்தும் நெட் பாங்க்கிங் அல்லது இது எதுவுமே சரி வராது... பொருள் கைல வந்தாதான் காசு கொடுப்பேன் என்னும் முன் ஜாக்கிரதை பார்ட்டிகளுக்கு கேஷ் ஆன் டெலிவரி Cash on delivery என்று எல்லோருக்கும் ஏற்ற ஆப்ஷன்களை ஆன்லைன் ஷாப்பிங் அளிக்கிறது. விலை அதிகமான பொருட்களை செல்போன், மடிக்கணினி, இன்ன பிற வாங்குவதற்கு EMI வசதியும் உண்டு.

இவ்வாறாக எல்லாம் தேர்ந்தெடுத்து பொருட்கள் வாங்கிய பின், ஏதேனும் காரணத்தால் பிடிக்காமல் போனாலும், அந்தப் பொருளை திருப்பி அனுப்ப இயலும். அப்படி திருப்பி அனுப்பப்பட்ட பொருளுக்கு பணத்தை திரும்பக் கொடுத்தோ, வேறு பொருளை மாற்றிக் கொள்ளும் வகையிலோ தெளிவான ரிட்டர்ன் பாலிசியுடன் இணைய வர்த்தகங்கள் இயங்கி வருகின்றன.

ஆகவே,நெரியும் கூட்டத்தில் அடித்துப் பிடித்துப் பொருட்கள் வாங்கிவிட்டு, பில் கட்ட கவுண்டர்களில் பழி கிடக்க வேண்டாம். வீட்டிலிருந்தே வசதியாக, விரல் நுனியில் விலை பேசிடுங்கள் வர்த்தகச் சந்தையை! எங்கே வாங்கலாம்? வீட்டு உபயோகப் பொருட்கள், புத்தகங்கள், மொபைல், லேப்டாப், பெயின்டிங்குகள் என வீட்டுக்குத் தேவையான அத்தனை பொருட்களும் A டூ Z கிடைக்கும் தளங்கள்...Flipkart.com, Amazon.com, Snapdeal.com, infibeam.com, shopclues.com, Homeshop18.com பச்சிளம் குழந்தை முதல் சற்றே பெரிய குழந்தைகள் வரை தேவைப்படும் டயாபர்கள், அழகிய தொட்டில்கள், ஆயத்த ஆடைகள், வாக்கர், கார் சீட், ஸ்லிங் பேக், விளையாட்டு சாமான்கள் கிடைக்கும்

வலைத்தளங்கள்... firstcry.com

babyoye.comநட்சத்திரங்கள் பயன்படுத்திய அதே மாடல் மற்றும் டிசைன் உடைகள், அலங்கார அணிமணிகள், விக்டோரியா சீக்ரெட்டுக்கே சவால் விடும் உள்ளாடைகள், டிரெண்டி வாட்சுகள் மற்றும் அழகிய காலணிகள், டெர்ரகோட்டா, குவில்லிங், குந்தன் மற்றும் போல்கி ஜுவல்லரிகள் போன்றவை கிடைக்கும் தளங்கள்... Clovia.com, Zivame.com, Craftsvilla.com, Mirraw.com, Myntra.com, Jabong.com பயண டிக்கெட்டுகள் - ஹோட்டல் புக்கிங் செய்ய... tripadvisor.in, goibibo.com, cleartrip.com, makemytrip.com, Yatra.com, travelguru.com, stayzilla.com பர்ஸுக்கு பதமான ஆன்லைன் ஷாப்பிங் செய்து மகிழ்ந்திருங்கள்


Post Comment

Post Comment