பேஸ்புக் லைவ் வசதியைத் தொடர்ந்து வந்தாச்சு லைவ் ஆடியோ!


Posted by-Kalki Teamபிரபல சமூகவலைதளமான பேஸ்புக்கில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றியடைந்த பேஸ்புக் லைவ் என்னும் வீடியோ பதிவேற்ற வசதியைத் தொடர்ந்து தற்போது லைவ் ஆடியோ என்னும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேஸ்புக்கில் புதிய செயலிகள் சிறப்பு வடிவமைப்பாளர் ஷெர்லி இப் மற்றும் மென் பொறியாளர் பாவனா ராதா கிருஷ்ணன் இருவரும் இணைந்து வலைப்பதிவு ஒற்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது;

பேஸ்புக் பயனீட்டாளர்கள் சில சமயம் தாங்கள் விரும்பம் தகவல்களை காட்சிகளுக்கு பதிலாக ஒலிகளின் வாயிலாக வெளிப்படுத்த விரும்பலாம்.அப்படி விரும்புவர்களுக்கு தற்போது அறிமுகப்படுத்தபட்டுள்ள லைவ் ஆடியோ வசதி மிகவும் உதவியாக இருக்கும்.

பயனீட்டாளர்கள் கருத்து பரிமாற்றங்களுக்கு வெவ்வேறு வகையான வசதிகளை நாடுவதாக எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே லைவ் 360 என்ற வசதியை கடந்த வாரம் அறிமுகபடுத்தி இருந்தோம். தற்போது இந்த வசதியை அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்கிறோம்.

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியானது சாதாரணமாக வானொலி அல்லது பாட்கேஸ்ட் முறைகளைப் போன்றே செயல்படும் என்று தெரிகிறது.Post Comment

Post Comment