ரஜினியின் மன்னன் 24 வருடங்களுக்கு பிறகு ரீமேக் செய்ய பி.வாசு முடிவு


Posted by-Kalki Teamரஜினி நடித்து வெற்றிபெற்ற ‘மன்னன்’ படம் 24 வருடங்களுக்கு ரீமேக்காகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

ரஜினி நடிப்பில் 1992-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற படம் ‘மன்னன்’. இப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். குஷ்பு, விஜய சாந்தி, பண்டரிபாய், மனோரமா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

சிவாஜி புரொடக்ஷன்ஸ் கம்பெனி தயாரித்திருந்தது.

கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு பிறகு இப்படத்தை ரீமேக் செய்ய பி.வாசு முடிவு செய்துள்ளார். அதற்கான கதாநாயகனையும் தேர்ந்தெடுத்துவிட்டார். பி.வாசு தற்போது இயக்கிவரும் சிவலிங்கா படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸையே ‘மன்னன்’ ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஜனவரி முதல் வாரத்தில் ‘சிவலிங்கா’ படத்தின் இசை மற்றும் டிரைலரையும், ஜனவரி 26-ந் தேதி படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ள பி.வாசு, அதன்பிறகு ‘மன்னன்’ ரீமேக்கிற்கான பணிகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. மன்னன் படத்தில் ரஜினியுடன் நடித்த கவுண்டமணி வேடத்திற்கு வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், குஷ்பு, விஜயசாந்தி உள்ளிட்டோர் வேடங்களில் நடிப்பவர்களின் நடிகைகள் தேர்வும் நடைபெற்று வருகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.


Post Comment

Post Comment