புதுச்சேரியில் 20வது தேசிய புத்தக கண்காட்சி :


Posted by-Kalki Teamபுதுச்சேரியில், கூட்டுறவு புத்தக சங்கம் சார்பில், 20வது தேசிய புத்தக கண்காட்சியை, முதல்வர் நாராயணசாமி நேற்று துவக்கி வைத்தார்.புதுச்சேரி வேல்சொக்கநாதன் திருமண மண்டபத்தில், நேற்று முதல், 25ம் தேதி வரை, 10 நாட்கள் தேசிய புத்தக கண்காட்சியை, கூட்டுறவு புத்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.முதல்வர் நாராயணசாமி

கண்காட்சியை திறந்து வைத்து, 6 புதிய நுால்களை வெளியிட்டார்.புத்தக ஸ்டால்களை பார்வையிட்ட முதல்வர், இந்திரா, அம்பேத்கர், மண்டேலா போன்ற தலைவர்களின் புத்தகங்களையும், யோகா மற்றும் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கினார்.நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன் மற்றும் புத்தக சங்கத்தலைவர் சீனு ராமச்சந்திரன், துணைத் தலைவர் பாஞ் ராமலிங்கம், செயலாளர் முருகன், இயக்குனர்கள் அப்துல் மஜீத், ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இக்கண்காட்சியில் 90 புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

வார நாட்களில் தினமும் மதியம் 2:00 மணி முதல், இரவு 8.45 வரையும், விடுமுறை நாட்களில் காலை 11:00 மணிமுதல் இரவு 8.45 வரைகண்காட்சி நடக்கிறது.கண்காட்சியில், 10 சதவீதம் தள்ளுபடியும், கல்வி நிறுவனங்கள், நுாலகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. 200 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்குவோர் குலுக்கல் முறையில், ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரூ. 500 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கும் நபருக்கு, புத்தக மகாராஜா அல்லது மகாராணி, 10 ஆயிரத்திற்கு மேல் புத்தகங்கள் வாங்கினால் புத்தக ராஜா அல்லது ராணி, ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கினால், புத்தக விரும்பி சான்றிதழ் வழங்கப்படும் என, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.


Post Comment

Post Comment