வேலையில்லா பட்டதாரி 2 - ரஜினி நேரில் வந்து வாழ்த்தி முதல் காட்சியைத் தொடங்கிவைத்தார் ;


Posted by-Kalki Teamசவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்க வேலையில்லா பட்டதாரி 2 படப்பிடிப்பு வியாழக்கிழமை முதல் துவங்கப்பட்டது. ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் பவர் பாண்டி படத்தைத் தொடர்ந்து சவுந்தர்யா இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி 2வில் நடிக்கவிருப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார்.

இப்படத்துக்கு கதை, வசனத்தை தனுஷ் எழுதியிருக்கிறார். திரைக்கதை எழுதி இயக்குகிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். அனிருத் மற்றும் ஷான் ரோல்டன் இருவருமே இசையமைக்க இருக்கிறார்கள். முதல் பாகத்தில் அனிருத் அளித்த சில பின்னணி இசைக் கோர்ப்புகளை மட்டும் 2-ம் பாகத்தில் இடம்பெறவிருப்பதால், அவருடைய பெயர் இசையமைப்பாளர் பெயரில் இடம்பெற்றுள்ளது.

இயக்குநர் சமுத்திரக்கனி, அமலாபால், விவேக் என முதல் பாகத்தில் உள்ள நடிகர்கள், 2ம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தம்

செய்யப்பட்டுள்ளார்கள். முதல் பாக முடிவிலிருந்து, 2-ம் பாகம் துவங்குவது போன்று கதை எழுதியிருக்கிறார் தனுஷ். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவிருக்கிறது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட்டது. இப்படக்குழுவுக்கு ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், "வேலையில்லா பட்டதாரி 2 படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ரஜினி. இதற்கு படக்குழுவினர் அனைவரும் தங்களுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார்கள்.Post Comment

Post Comment