பைரவா ஆடியோ ரிலீஸ் தேதி உறுதியானதா?


Posted by-Kalki Teamவிஜய் நடித்துள்ள பைரவா படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி உறுதியானதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.. அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் உருவாகும் ‘பைரவா’ படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளதையடுத்து, தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக படக்குழுவினர் இறங்கியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

சதிஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, அபர்ணா வினோத், ஸ்ரீமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை வரும் டிசம்பர் 17-ந் தேதி வெளியிடப் போவதாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால், இந்த செய்தி வெளிவந்த சில நிமிடங்களிலேயே இது வெறும் புரளிதான் என்று படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பைரவா’ ஆடியோ வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், உறுதியானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதேபோல், இப்படத்தின் பாடல்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post Comment

Post Comment