6 மாதம் மட்டுமே திறந்திருக்கும் அதிசயக்கோயில்…!


Posted by-Kalki Teamஒரு வருடத்தில் 6 மாதம் மட்டுமே திறந்திருக்கும் அதிசயகோயில் ஒன்று இமயமலை அருகே அமைந்துள்ளது அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது. பத்ரிநாத் திருத்தலம்.

உத்ரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் தாம் என்ற இடத்தில் இருக்கும் இந்த ஆலயம், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் என்று கூறப்படுகின்றது.

இத்தல இறைவன் பத்ரி நாராயணர் என்றும், தாயார் அரவிந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறார்கள். கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடிக்கு மேலே இருக்கும் இந்த இடத்திற்குச் செல்ல பல வளைவுகளை கடக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

மேலும் வாட்டி வதைக்கும் குளிரும் உண்டு. பத்ரிநாத் ஆலயம் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டுமே திறந்திருக்கும். தீபாவளியையொட்டி நடையடைக்கப்படும். நவம்பர் முதல் ஏப்ரல் வரை நடை மூடப்பட்டிருக்கும்.

கோவிலை மூடும்போது, ஆலயத்தில் அதிக நெய் ஊற்றி ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் கோவில் திறக்கப்படும் வரை, அதாவது ஆறு மாதம் காலம் எரிந்து கொண்டே இருக்கும். நடை அடைக்கப்படும் 6 மாதமும் தேவர்கள், பத்ரிநாராயணரை பூஜிப்பதாக ஐதீகம்.Post Comment

Post Comment