சந்தானம்- செல்வராகவன் இணையும் படப்பிடிப்பு தொடங்கியது :


Posted by-Kalki Teamசந்தானம்- செல்வராகவன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து செல்வராகன் சந்தானத்தை வைத்து ஒரு படத்தையும், விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க தயாராக இருக்கிறார். முதலில், சந்தானத்தை முடித்துவிட்டு, அதன்பிறகு விஜய் படத்தை இயக்குவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று செல்ராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. சந்தானமும், செல்வராகவனும் சேர்ந்து நிற்பதுபோல் புகைப்படத்தை சமூக இணையதளங்களில் வெளியிட்டு, படப்பிடிப்பு தொடங்கியது என்று அறிவித்துள்ளனர்.

ரொமான்டிக், காமெடி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ஹீரோயின் யார்? என்பதை இதுவரை படக்குழுவினர் தேர்ந்தெடுக்கவில்லை. முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


Post Comment

Post Comment