#ஆப்ப சோடாவின் பயன்கள்..!


Posted by-Kalki Teamபுளித்த ஏப்பம் நீங்கிட தக்காளி சூப்பில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா போட்டுக் குடித்தால் போதும். வேர்க்குரு நீங்க ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடாவைக் கொஞ்சம் தண்ணீரில் கலக்கிப் பூசவும்.

ஆப்ப சோடாவைத் தண்ணீர் விட்டுக் கொப்புளத்தில் பூசினால் குணம் தெரியும். பல் வலி பாடாய்ப்படுத்தினால் கொஞ்சம் ஆப்ப சோடாவை ஈறின் மீது அழுத்தித் தடவவும்.

காலையிலும் மாலையிலும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஆப்ப சோடா கலந்து வாய் கொப்பளித்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.


Post Comment

Post Comment