ரஜினியின் 2.ஓ பர்ஸ்ட் லுக் வெளியானது : 3டியில் தீபாவளிக்கு படம் வெளியாகிறது :


Posted by-Kalki Teamரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 2.ஓ. சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சி மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தின் உள்ளே சுற்றிலும் எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு, அதில் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் திரையிடப்பட்டன.

இவ்விழாவில், ரஜினி, சங்கர், ஏ.ஆர்.ரகுமான், அக்ஷய் குமார், ரசூல் பூக்குட்டி, உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் ஆர்யா, விஜய் ஆண்டனி, எடிட்டர் ஆண்டனி, எழுத்தாளர் ஜெயமோகன், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

மேலும், பாலிவுட் பிரபலங்கள் பலரும் வருகை தந்தனர். முதலில் அக்ஷய்குமார் கெட்டப்புக்குண்டான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரே மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இப்படம் 3டியில் உருவாகியிருப்பதையும், அடுத்த வருடம் தீபாவளிக்கு படம் வெளிவரும் என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தனர். மேலும், தெலுங்கு பதிப்புக்குண்டான பர்ஸ்ட் லுக் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படத்தை பற்றிய மேலும் ஒரு முக்கியமான குறிப்பு : பியர்ல் ஹார்பர், டை ஹார்டு, ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் போன்ற படங்களின் சண்டைப் பயிற்சியாளர் கென்னி பேட்ஸ் 2.ஓ படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து இருக்கிறார்.

இந்த விழாவை லைக்கா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் வலைத்தளத்தில் 5 மணியில் இருந்து நேரடியாக ஒளிப்பரப்புவதாக அறிவித்திருந்தது. ஆனால், அவர்கள் சொன்ன நேரத்திற்கு அரை மணி நேரம் தாண்டியும் இதுவரை நேரலை ஒளிப்பரப்பவே இல்லை. இதனால் ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மும்பையில் இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி தொடங்குவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டிருக்கலாமோ என்ற எண்ணமும் எழுந்துள்ளது. எனினும், விரைவில் இதுகுறித்து படக்குழு தரப்பிலிருந்து அறிவிப்பார்கள் என காத்திருக்கலாம்.


Post Comment

Post Comment