மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் மஞ்சூரியன் :


Posted by-Kalki Teamமாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பிரெட் மஞ்சூரியன் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

பிரெட் துண்டுகள் - 8

மைதா மாவு - 2 ஸ்பூன்

சோள மாவு - 1/2 ஸ்பூன்

வெங்காயம் - 1/2 கப்

பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

குடமிளகாய் - 1 சிறியது

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது - 3 ஸ்பூன்

சோயா சாஸ், தக்காளி சாஸ் - தேவைகேற்ப

எண்ணெய், உப்பு - தேவைகேற்ப

செய்முறை :

* வெங்காயம், குடமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

* பிரெட் துண்டுகளைச் சிறிதாக வெட்டி, மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* இதனுடன் மிளகாய் தூள், சோயா சாஸ், உப்பு, தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்.

* இந்த கிரேவியில் ஏற்கனவே பொரித்து வைத்த பிரட் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறி வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்.

* சூடான, சுவையான பிரட் மஞ்சூரியன் தயார்.


Post Comment

Post Comment