எங்கிட்ட மோதாதே ரஜினி-கமல் ரசிகர்கள் கதை -நட்டி ;


Posted by-Kalki Teamநட்டி நடராஜ் எங்கிட்ட மோதாதே படம் குறித்து தனது அனுபவத்தை தெரிவித்துள்ளார். அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்..

இயக்குனர் பாண்டிராஜ் உதவியாளர் ராமுசெல்லப்பா இயக்கியுள்ள படம் எங்கிட்ட மோதாதே. இதில் நட்டி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் சஞ்சிதா ஷெட்டி, பாலாஜி, பார்வதி நாயர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.

படம் பற்றி கூறிய நட்டி... “ இந்த படத்தின் கதை 1986-87-ல் நடந்ததாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பொழுது போக்கு சினிமா தான். ரஜினி, கமல் ரசிகர்கள் கடுமையாக மோதிக்கொண்ட நேரம் அது. நான் ரஜினி ரசிகராக நடித்து இருக்கிறேன். பாலாஜி கமல் ரசிகராக வருகிறார். இரண்டு பேருக்கும் கட்அவுட் வரைவது விளம்பரங்கள் எழுதுவது தொழில். அதற்கு பின்னால் எவ்வளவு அரசியல் இருந்தது ? அந்த கால ரசிகர்கள் எப்படி இருந்தார்கள் என்பதையும், நட்பு தான் எல்லாவற்றையும் விட மேலானது என்பதையும் சொல்லி இருக்கிறோம்.

நெல்லை பின்னணியில் படம் உருவாகி இருக்கிறது. இன்று செல்போன் யுகம். இந்த படத்தில் 1986-ம் ஆண்டு கால கட்டத்தை கொண்டுவர கஷ்டப்பட்டோம். இந்த படத்தில் ஒரு பாடலை நான் பாடி இருக்கிறேன். 1987 கதை என்பதால் எம்.ஜி.ஆர். மறைவை பதிவு செய்வது போன்ற காட்சிகளை எடுத்தோம். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் படப்பிடிப்பு என்பதை அறியாமல் எம்.ஜி.ஆர். படத்தை பயபக்தியுடன் வணங்கினார்கள். இதைப்பார்த்து மெய் சிலிர்த்துப்போனோம்” என்றார்.

விழாவில் இயக்குனர் பாண்டிராஜ், இசை அமைப்பாளர் நடராஜன் சங்கரன், சஞ்சிதா ஷெட்டி, இயக்குனர் ராமு செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.Post Comment

Post Comment