ஆலு மட்டர் கறி :


Posted by-Kalki Teamஆலுமட்டர் கறி பல குடும்பங்களில் தயாரிக்கப்படும் மிகவும் பொதுவான உணவுகளில் ஒன்றாகும். பட்டாணி, உருளைக்கிழங்கு மட்டும் பலவகை மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி இது தயாரிக்கப்படுகிறது. அரிசி சாதமோ அல்லது ரொட்டியோ, மதிய உணவோ அல்லது இரவு உணவோ எந்த நேரமாக இருந்தாலும், எந்த வகை உணவாக இருந்தாலும் ஆலுமட்டர் உங்களின் சாப்பாடு மேஜையில் இருந்தால் போதும். உங்களின் உணவு வேளை மறக்க முடியாததாக மாறி விடும்.

தேவையான பொருட்கள் :

1. எண்ணெய் - 2 தேக்கரண்டி

2. சீரகம் - அரை தேக்கரண்டி

3. வெங்காயம் - முக்கால் கப் (நறுக்கியது)

4. பூண்டு - 1 தேக்கரண்டி (நறுக்கியது)

5. இஞ்சி - 1 தேக்கரண்டி (நறுக்கியது)

6. பச்சை மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி

7. தக்காளி - 1 கப் (நறுக்கியது)

8. தண்ணீர் - தேவையான அளவு

9. பச்சை பட்டாணி - 1 கப் (வேகவைத்தது)

10. உருளைக்கிழங்கு சதுரமாக நறுக்கியது - 1½ கப் (வேகவைத்தது)

11. உப்பு - தேவையான அளவு

12. மிளகாய் தூள் - 1 ½ தேக்கரண்டி

13. கரம் மசாலா - ½ தேக்கரண்டி

14. மஞ்சள் - ஒரு சிட்டிகை

15. கொத்தமல்லி இலை - 1 தேக்கரண்டி (நறுக்கியது)

செயல்முறை:

ஒரு நான்ஸ்டிக் பானை எடுத்து அதில் எண்ணெயைச் சேர்த்து சூடு படுத்துங்கள். எண்ணெய் சூடானவுடன் அதில் சீரகம் சேர்க்க வேண்டும். சீரகம் வெடிக்கத் தொடங்கியவுடன் அதில் நறுக்கப்பட்ட வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயத்தின் நிறம் தங்க பழுப்பு நிறமாக மாறும் வரை நன்கு வதக்கவும் இப்போது, பூண்டு, இஞ்சி, தக்காளி, மற்றும் பச்சை மிளகாய் பேஸ்டை சேர்க்கவும். உங்களுடைய தக்காளி வேக சிறிது நேரம் பிடிக்குமெனில், கலவையுடன் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக விடுங்கள்.

இப்போது, கலவையை நன்கு கலக்கி, தக்காளியை நன்கு மசித்து விடுங்கள். கலவை நன்கு சமைத்த பிறகு அதில் பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும்.

இப்போது கலவையில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்போது, கலவையுடன் ஒரு கப் தண்ணீற் சேர்த்து கறியை நன்கு கொதிக்க விடவும். உருளைக்கிழங்குகளை லேசாக மசித்து விடவும். இவ்வாறு செய்தால் கறி தடிமனாக மாறிவிடும்.

இப்போது, உங்களுடைய ஆலுமட்டர் சப்ஜி பறிமாறத் தயாராக உள்ளது. அடுப்பை அணைத்த பின்னர் ஆலுமட்டர் கறியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி விடவும். துண்டாக்கப்பட்ட கொத்தமல்லியை ஆலுமட்டர் கறியின் மீது தூவி அதை அழகுபடுத்தவும்.

செய்முறை மிகவும் எளிதாக இருக்கின்றது அல்லவா? மிகவும் ருசி மிகுந்த இந்த கறியை நீங்கள் பன்/ரொட்டியுடன் சேர்த்தும் ருசிக்கலாம். காய்கறிகளை வெறுத்து தலை தெறிக்க ஓடும் குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.Post Comment

Post Comment