அஜீரணக் கோளாறை சரிசெய்யும் சக்ராசனம் :


Posted by-Kalki Teamநம் உடலை, சக்கரம் போன்று வளைப்பதால் இந்த ஆசனம் இப்பெயர் பெற்றது. அஜீரணக்கோளாறால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வரலாம்.

செய்முறை :

விரிப்பில் நிமிர்ந்த நிலையில் படுக்கவும். இரண்டு கால்களையும் மடக்க வேண்டும். கால்களுக்கு இடையே, சற்று இடைவெளி இருக்க வேண்டும். கைகளை பின்புறமாக கொண்டு சென்று, கழுத்தின் பக்கவாட்டில் சிறிது இடைவெளி விட்டு, உள்ளங்கை தரையில் படுமாறு வைக்க வேண்டும்.

உள்ளங்கைகளை அழுத்தியவாறு, மெதுவாக முதுகை உயர்த்தி, பின் தலையை உயர்த்த வேண்டும் (இந்த நிலையில் தலையை கீழே தொங்க விட வேண்டும்.). ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும்.

வலுவிழந்த மணிக்கட்டு உள்ளோர், இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

பலன்கள் :

நம் உடம்பிலுள்ள நரம்பு மண்டலம் பலமாகும்.

வயிறு இறுக்கப்படுவதால், உடல் எடை குறையும்.

அஜீரணக் கோளாறு சரியாகும்.

கைகள் மற்றும் மூட்டு வலுப்பெறும்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.Post Comment

Post Comment