14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சேரும் சூப்பர் ஜோடி: ரசிகர்கள் மகிழ்ச்சி


Posted by-Kalki Teamமும்பை: 14 ஆண்டுகள் கழித்து ஷாருக்கானும், ஐஸ்வர்யா ராயும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்களாம்.

பாலிவுட்டின் சூப்பர் ஜோடிகளில் ஒன்றும் ஷாருக்கானும், ஐஸ்வர்யா ராயும். அவர்கள் காதலர்களாகவும் நடித்துள்ளனர், உடன்பிறப்புகளாகவும் நடித்துள்ளனர்.

அவர்கள் இருவரும் சேர்ந்து கடைசியாக 2002ம் ஆண்டில் வெளியான தேவதாஸ் படத்தில் நடித்தனர்.

கரண் ஜோஹார் இயக்கத்தில் தீபாவளிக்கு ரிலீஸான ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஷாருக்கான் ஐஸ்வர்யா ராயின் கணவராக நடித்தார். ஆனால் கவுரவத் தோற்றத்தில் நடித்தார்.

ஏ தில் ஹை ஷூட்டிங்கில் ஷாருக், ஐஸ்வர்யாவை சேர்த்து பார்த்த கரண் ஜோஹாருக்கு அவர்களை ஜோடி சேர்த்து புதிய படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது.

ஷாருக்கான், ஐஸ்வர்யா ராயை வைத்து எந்த வகையான படத்தை எடுக்க வேண்டும் என்பதை கூட கரண் யோசித்து வைத்துவிட்டாராம். ஷாருக்-ஐஸ் மீண்டும் ஜோடி சேர்வதை அறிந்து பாலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்ந்து நடித்த படங்களில் மொஹபத்தைன் படத்தை பாலிவுட் ரசிகர்களால் மறக்க முடியாது. அத்தகைய வெற்றி ஜோடி மீண்டும் ஒன்று சேர்கிறது.


Post Comment

Post Comment