அத்தோ மொயிகான் பேஜோ


Posted by-Kalki Teamவடசென்னையே கலக்கும் பர்மா உணவு…

பாரிமுனையிலிருந்து இரண்டாவது கடற்கரை சாலையில் சென்னை பங்குச் சந்தை அலுவலகம். அலுவலகத்தையொட்டி தள்ளுவண்டியில் பெட்ரோ மாக்ஸ் விளக்குகள் ஒளியை தந்து கொண்டிருக்கின்றது. பெரிய சைஸ் தோசை கல்லில் நூடுல்ஸ் , புதினா , எலுமிச்சை , முட்டை கோஸ் , பூண்டு , புளி தண்ணீர் , வெங்காயம் இவற்றுடன் நல்லெண்யெய் கலந்து சுடச்சுட அத்தோ தயாராக அதனை அழகிய பீங்கான் தட்டுகளில் சாப்பிட பரிமாறுகின்றார்கள்.

ஒருமுறை இங்கு சாப்பிட்டால் திரும்ப திரும்ப வந்து உண்ணும் பழக்கம் நண்பர்களுக்கு வந்து விடுகிறது என்று சொல்கிறார்கள் . சென்னையில் பல பகுதியில் இருந்தும் வந்து கூட அத்தோவை விரும்பி உண்ணுகிறார்கள் சில பணக்கார தொழில் அதிபர்களை கூட இந்த அத்தோ கடை உரிமையாளர்கள் தனது நிரந்தர வாடிக்கையாளராக வைத்து உள்ளார்கள் என்பது கூடுதல் சுவாரசியம் !!

அத்தோ என்பது பர்மாவின் தேசிய உணவு. பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியவர்களால் இரண்டாவது கடற்கரை சாலையில் அத்தோ நூடுல்ஸ் கடைகள் நடத்தப்படுகின்றன. அத்தோவிலும் சைவம், அசைவம் இருக்கின்றது.

அத்தோவுடன் வாழை தண்டு சூப் மற்றும் பேஜோவை சேர்த்து சாப்பிடலாம். பேஜோ என்பது தட்டை போலிருக்கும். இதனை சூப்பில் ஊற வைத்தும் தருகின்றார்கள். வாழை தண்டு சூப் கிட்னி மற்றும் குடலில் கல் இருக்கும் நோயாளிகளால் விரும்பிச் சாப்பிடப்படுகின்றது. ரூ.20ல் இருந்து ரூ.30 வரை விற்க்கப்படும் அத்தோ வட சென்னையில் இரவு உணவாகவெ தயார் செய்யப்படுகின்றது. வட சென்னை வந்தால் ஒரு தட்டு அத்தோ சாப்பிடலாமா?

60களில் பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியோருக்காக அரசால் தமிழக அரசு வியாசர்பாடியில் பி.வி.காலனி,சாஸ்திரி நகர்,சர்மா நகர்,பாரதி நகர்,புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் நிலங்களை ஒதுக்கியது இவ்விடங்களில் அத்தோ தவிர்த்து மொய்ங்கா,பேபியோ,கவ்ஸ்வே, மொபெட்டோ போன்ற பர்மிய உணவு வகைகள் கிடைக்கின்றது.

குறிப்பு

இதில் கூடுதல் சுவைக்காக அஜினோமோடோ சேர்க்கபடுகிறது அஜினோமோட்டோ விரும்பாதவர்கள் கடைகாரரிடம் சொல்லி தவிர்த்து கொள்ளலாம்Post Comment

Post Comment