வியப்பில் ஆழ்த்தும் வீரம் பட டீஸர்!


Posted by-Kalki Teamகேரளா : எது எப்படியோ டீஸரும் ட்ரெய்லரும் முதலில் நன்றாக இருக்கிறதா என ரசிகர்கள் தேடும் காலம் இது. அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற, படம் வெளியானதும் முதல் 3 நாட்கள் கல்லா கட்ட அவசியமானது நல்ல டீஸரும் ட்ரெய்லரும். இந்த ட்ரெண்டில், தற்போது இணைந்திருப்பது வீரம் படத்தின் டீஸர்.

இது அஜித் நடித்த வீரம் அல்ல. மலையாளத்தின் பிரபல இயக்குநர் ஜெயராஜ் இயக்கியிருக்கும் வீரம். ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் இந்தியத் தழுவலாக தயாராகியுள்ளது. அந்த நாடகத்தின் கதையை ஒரு மலையாள பாரம்பரிய வரலாற்று சித்தரிப்பாக ஜெயராஜ் உருவாக்கியுள்ளார்.

புகழ்பெற்ற 300 என்கிற ஹாலிவுட் படத்தை வீரம் படத்தின் ட்ரெய்லர் நினைவுபடுத்திகிறது.

காட்சியமைப்பு, நடிப்பு, வசனம், கிராஃபிக்ஸ், சண்டைக் காட்சிகள் என பார்க்கும் ஒவ்வொரு சினிமா ஆர்வலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது வீரம்.

ஒட்டாள், சாந்தம், களியாட்டம், தேசாடனம் ஆகிய படங்களுக்காக தேசிய விருது வென்ற இயக்குநர் ஜெயராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரெ நேரத்தில் உருவாகியிருக்கும் வீரம், ப்ரிக்ஸ் திரைப்பட விழாவில் ஏற்கெனவே திரையிடப்பட்டுள்ளது. நவரசங்களைக் மையமாக வைத்து ஜெயராஜ் இயக்கிய சாந்தம், கருணம், பிபத்ஸா, அத்புதம் ஆகிய படங்களின் வரிசையில் இது 5-வது படம்.Post Comment

Post Comment